தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பணம் மட்டும் காரணமா * என்ன சொல்கிறார் ரிஷாப் பன்ட்

பணம் மட்டும் காரணமா * என்ன சொல்கிறார் ரிஷாப் பன்ட்

பணம் மட்டும் காரணமா * என்ன சொல்கிறார் ரிஷாப் பன்ட்


ADDED : நவ 19, 2024 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2024 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெர்த்: ''டில்லி அணியில் நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் மட்டும் காரணம் அல்ல,'' என ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 27. ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணி கேப்டனாக இருந்தார். கடந்த 2016 முதல் 111 போட்டியில் 18 அரைசதம் உட்பட 3,284 ரன் எடுத்துள்ளார்.

இருப்பினும், இவரை டில்லி நிர்வாகம் தக்கவைக்கவில்லை. தற்போது ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,'' ஒரு வீரரை தக்கவைக்கும் போது, அவரது எதிர்பார்ப்பு, சம்பளம் குறித்து, அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும். 'நம்பர்-1' வீரராக இருப்பவருக்கு எவ்வளவு தரப்படும் என தெரிவிப்பர். இவ்விஷயத்தில் அணி நிர்வாகத்துடன் ரிஷாப்பிற்கு முரண்பாடு ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஏலத்தில் இவரை மீண்டும் வாங்க முயற்சிப்பர்,'' என்றார்.

இதை மறுத்து ரிஷாப் பன்ட் வெளியிட்ட செய்தியில்,' டில்லி அணி நிர்வாகம் என்னை தக்க வைக்காததற்கு பணம் மட்டும் காரணமல்ல. இதை என்னால் உறுதியாக கூற முடியும்,' என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us