/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பிரவிஸ் ஒப்பந்தம் சரியா * சென்னை அணி விளக்கம்
/
பிரவிஸ் ஒப்பந்தம் சரியா * சென்னை அணி விளக்கம்
ADDED : ஆக 16, 2025 10:46 PM

சென்னை: 'பிரவிஸ் ஒப்பந்தம் அனைத்தும் விதிகளுக்கு உட்பட்டு தான் நடந்தது,' என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல்., தொடரில் கடந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய குர்ஜப்னீத் சிங் (ரூ. 2.2 கோடி) காயத்தால் பாதியில் விலகினார். இவருக்குப் பதில் தென் ஆப்ரிக்காவின் டிவால்டு பிரவிஸ் ரூ. 2.2 கோடிக்கு ஒப்பந்தம் ஆனார். 6 போட்டியில் 225 ரன் எடுத்தார்.
தற்போது ஆஸ்திரேலிய தொடரில் (2, 125, 53) ரன் மழை பொழிந்தார். இதுகுறித்து இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், சென்னை அணியின் அஷ்வின் கூறுகையில்,'' ஒப்பந்தத்தை விட கூடுதல் பணம் கொடுத்து தான் பிரவிஸ், வாங்கப்பட்டார்,'' என தெரிவிக்க, சர்ச்சை ஆனது.
இதற்கு மறுப்பு தெரிவித்து சென்னை அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,' கடந்த ஏப்ரல் மாதம், குர்ஜப்னீத் சிங்கிற்கு கொடுக்கப்பட்டதைப் போல, ரூ. 2.2 கோடிக்கு தான் பிரவிஸ் வாங்கப்பட்டார். இந்த ஒப்பந்தம் அனைத்தும் ஐ.பி.எல்., விதிகளுக்கு உட்பட்டு தான் நடந்தன. இதில் எவ்வித விதிமீறலும் இல்லை,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.