sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

'சூப்பர் ஓவரில்' டில்லி வெற்றி * ராஜஸ்தான் போராட்டம் வீண்

/

'சூப்பர் ஓவரில்' டில்லி வெற்றி * ராஜஸ்தான் போராட்டம் வீண்

'சூப்பர் ஓவரில்' டில்லி வெற்றி * ராஜஸ்தான் போராட்டம் வீண்

'சூப்பர் ஓவரில்' டில்லி வெற்றி * ராஜஸ்தான் போராட்டம் வீண்


ADDED : ஏப் 17, 2025 12:29 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான பிரிமியர் போட்டியில் டில்லி அணி, சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

பிரிமியர் லீக் தொடரில் நேற்று டில்லியில் நடந்த போட்டியில் டில்லி, ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பீல்டிங் தேர்வு செய்தார். இரு அணி தரப்பிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

அபிஷேக் '49'

டில்லி அணிக்கு ஜாக் பிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரல் ஜோடி துவக்கம் கொடுத்தது. துஷார் தேஷ்பாண்டே வீசிய இரண்டாவது ஓவரின் முதல் ஐந்து பந்தில் 4, 4, 6, 4, 4 என அபிஷேக் விளாச, மொத்தம் 23 ரன் கிடைத்தன. மெக்கர்க் (9) ஆர்ச்சர் பந்தில் அவுட்டானார். கருண் நாயர் 'டக்' அவுட்டானார். ராகுல், 32 பந்தில் 38 ரன் எடுத்த போது, ஆர்ச்சர் பந்தில் ஹெட்மயரிடம் 'கேட்ச்' கொடுத்தார்.

ஹசரங்கா பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட அபிஷேக், 49 ரன்னில் அவுட்டானார்.

ஹசரங்கா பந்துகளில் தொடர்ந்து 4, 4, 6 என அடித்தார் அக்சர். தீக்சனா ஓவரிலும் (6, 4, 4) மிரட்டிய அக்சர் (34 ரன், 14 பந்து, ஸ்டிரைக் ரேட் 242.85), அவரிடமே அவுட்டானார். கடைசி 30 பந்தில் 77 ரன் எடுக்கப்பட்டன. டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்தது. ஸ்டப்ஸ் (34), அஷூதோஷ் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஜெய்ஸ்வால் அரைசதம்

ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. சாம்சன் (19 பந்தில் 31 ரன்) இடது பக்க வலி காரணமாக 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். ரியான் பராக் (8) நிலைக்கவில்லை. ஸ்டப்ஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜெய்ஸ்வால், 34 பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 51 ரன்னில் குல்தீப் சுழலில் வீழ்ந்தார்.

ராணா அபாரம்

மோகித் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ராணா, 26 பந்தில் அரைசதம் எட்டினார். ஸ்டார்க் வீசிய 'யார்க்கரில்' ராணா (51) வீழ்ந்தார். கடைசி ஓவரில், 9 ரன் தேவைப்பட்டன. ஹெட்மயர், ஜுரல் இருந்ததால் ராஜஸ்தான் வெற்றி பெறும் என நம்பப்பட்டது. ஆனால், அனுபவ ஸ்டார்க், 'யார்க்கர்' பந்துகளாக வீசி மிரட்டினார்.

முதல் 5 பந்தில் 7 ரன் (1, 1, 2, 2, 1) மட்டும் எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட, ஜுரல் (26) 1 ரன் மட்டும் எடுத்து ரன் வீணாக அவுட்டானார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 188/4 ரன் எடுத்தது. போட்டி சமன் ஆனது.

'திரில்' வெற்றி

வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் ராஜஸ்தான் களமிறங்கியது. ஸ்டார்க் பந்து வீசினார். 2வது பந்தில் ஹெட்மயர் பவுண்டரி அடித்தார். 'நோ பாலாக' வீசப்பட்ட 4 வது பந்தில் பவுண்டரி அடித்த ரியான் பராக் (4) ரன் அவுட்டானார். அடுத்து ஜெய்ஸ்வால் (1) ரன் அவுட்டானார். ராஜஸ்தான் அணி 11/2 ரன் மட்டும் எடுத்தது. ஹெட்மயர் (5) அவுட்டாகாமல் இருந்தார்.

12 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது டில்லி. முதல் 3 பந்தில் ராகுல் (2, 4, 1) 7 ரன் எடுத்தார். 4வது பந்தில் ஸ்டப்ஸ் (6) சிக்சர் அடிக்க, டில்லி அணி 0.4 ஓவரில் 13/0 ரன் எடுத்து 'திரில்' வெற்றி பெற்றது.

ஒரு ஓவர், 2 விக்கெட்

சூப்பர் ஓவரில் இரு அணிக்கும் தலா ஒரு ஓவர் வீசப்படும். இரு அணி தரப்பில் தலா 3 வீரர்கள் (2 விக்கெட்) பேட்டிங் செய்யலாம்.

ஸ்டார்க் பந்தில்...

'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் பந்துகளை விளாசினார் இந்தியாவின் ஜெய்ஸ்வால். அப்போது ஸ்டார்க்கை பார்த்து, 'உங்கள் பந்து மிக மெதுவாக வருகிறது,' என, அப்போது வார்த்தை மோதலில் ஈடுபட்டார். நேற்று டில்லி அணிக்காக ஸ்டார்க் பவுலிங் செய்தார். இவரது இரண்டாவது ஓவரில், 4, 6, 4 என அடித்த ஜெய்ஸ்வால் 17 ரன் எடுத்து மிரட்டினார்.

ஹெட்மயர் சரியா

நேற்று ஸ்டார்க் வீசிய 20 வது ஓவரில் 4 பந்தில் ஹெட்மயர் 6 ரன் தான் எடுத்தார். ரியான் பராக்கும் (8) ஏமாற்றி இருந்தார். ஆனால் அரைசதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால், ராணாவை சூப்பர் ஓவரில் முதலில் களமிறக்காமல், ஹெட்மயர், ரியான் பராக்கை அனுப்பியது வினோதமாக இருந்தது.

30 பந்து, 77 ரன்

நேற்று டில்லி அணி 15 ஓவரில் 111/4 ரன் மட்டும் எடுத்திருந்தது. கடைசி நேரத்தில் அக்சர், ஸ்டப்ஸ் கைகொடுக்க,

11 பந்து

பிரிமியர் தொடரில் ஒரு ஓவரில் அதிக பந்து வீசிய பவுலர்களில் முதலிடத்தை முகமது சிராஜ் (2023, 19 வது ஓவர், எதிர்-மும்பை), துஷார் தேஷ்பாண்டே (2023, 4, லக்னோ), ஷர்துல் தாகூருடன் (2025, 13, கோல்கட்டா) பகிர்ந்து கொண்டார் ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா (2025, 20, டில்லி). 4 பவுலர்களும் நோ-பால், வைடு உட்பட தலா 11 பந்து வீசினர்.






      Dinamalar
      Follow us