/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
எச்சில் பயன்படுத்த அனுமதி * கொரோனாவுக்குப் பின் முதன் முறையாக...
/
எச்சில் பயன்படுத்த அனுமதி * கொரோனாவுக்குப் பின் முதன் முறையாக...
எச்சில் பயன்படுத்த அனுமதி * கொரோனாவுக்குப் பின் முதன் முறையாக...
எச்சில் பயன்படுத்த அனுமதி * கொரோனாவுக்குப் பின் முதன் முறையாக...
ADDED : மார் 20, 2025 11:12 PM

மும்பை: கொரோனாவுக்குப் பின் முதன் முறையாக, பந்தில் எச்சில் பயன்படுத்திக் கொள்ள பி.சி.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.
கிரிக்கெட்டில் பவுலர்கள் எச்சில் பயன்படுத்தி பந்தை பளபளபாக்கினர். வேகப்பந்து வீச்சாளர்கள் 'ரிவர்ஸ் ஸ்விங்' செய்ய இது கைகொடுத்தது. ஆனால் 2019ல் பரவிய கொரோனா காரணமாக, எச்சில் பயன்படுத்த ஐ.சி.சி., தடை விதித்தது. 2022ல் இது நிரந்தரமானது.
சமீபத்தில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறுகையில்,'' மீண்டும் எச்சில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்,'' என்றார். இதற்கு பலதரப்பில் ஆதரவு பெருகியது.
இதனிடையே நேற்று மும்பையில் நடந்த ஐ.பி.எல்., கேப்டன்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான கேப்டன்கள் ஆதரவு தெரிவித்ததால், சர்வதேச அளவில் முதன் முறையாக, வரும் ஐ.பி.எல்., தொடரில், பந்து வீச்சாளர்கள், பந்தில் எச்சில் பயன்படுத்திக் கொள்ள இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதி அளித்துள்ளது.
தொடரும் 'இம்பேக்ட்'
ஐ.பி.எல்., தொடரில் போட்டியின் சூழலுக்கு ஏற்ப, கூடுதலாக ஒரு மாற்று வீரரை களமிறக்கும் 'இம்பேக்ட்' விதி குறித்து சமீபத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். எனினும் இது 2027 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது.
* கூடுதல் 'டி.ஆர்.எஸ்.,'
ஆப் ஸ்டம்பிற்கு வெளியே உயரம் அல்லது அகலமாக செல்லும் பந்துகளுக்கு எதிராக, 'டி.ஆர்.எஸ்.,' கேட்டு அப்பீல் செய்ய அனுமதி தரப்பட்டது. 'ஹாக் ஐ', 'பால் டிராக்கிங்' முறையை பயன்படுத்தி இதற்கு, தீர்ப்பு வழங்கப்படும்.
* அணிகள் தாமதமாக பந்துவீசினால், கேப்டன்களுக்கு தடை விதிக்கப்படாது. தகுதி இழப்பு புள்ளி, அபராதம் மட்டும் விதிக்கப்படும்.
20 ஓவர், 3 பந்து
'டி-20' கிரிக்கெட்டில் முதன் முறையாக 3 பந்து பயன்படுத்தப்பட உள்ளது. பகலிரவு போட்டிகளில் மட்டும் இரண்டாவது பவுலிங் செய்யும் அணி, பனிப்பொழிவு காரணமாக பாதிக்கப்படுவதை தடுக்க இம்முடிவு எடுக்கப்பட்டது. இதன் படி, 11 வது ஓவரில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பந்துகளில் இருந்து, ஏதாவது ஒரு பந்தை மாற்றிக் கொள்ளலாம். புதிய பந்துக்கு அனுமதி இல்லை.