ADDED : மார் 24, 2026 11:21 PM

பெங்களூரு: வெற்றி விழாவில் பலியான 11 பேரின் நினைவாக, பெங்களூரு வீரர்கள் 11ம் 'நம்பர்' பொறித்த 'ஜெர்சி' அணிந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடரில். கடந்த ஆண்டு பெங்களூரு அணி கோப்பை வென்றது. முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதால், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 2025, ஜூன் 4ல் விழா நடத்தப்பட்டது. கோலி, கேப்டன் ரஜத் படிதார் உள்ளிட்ட வீரர்களை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
காலி இருக்கை அஞ்சலி
மைதானத்திற்குள் நுழைய முற்பட்ட போது ஏற்பட்ட நெரிசலில், 11 பேர் பலியாகினர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக பல்வேறு விஷயங்களை பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கூறுகையில்,''வரும் 28ல் சின்னசாமி மைதானத்தில் முதல் லீக் போட்டி (எதிர், ஐதராபாத்) நடக்க உள்ளது. இதற்கு முன்னதாக, பெங்களூரு அணி வீரர்கள் 11ம் நம்பர் பொறித்த 'ஜெர்சி' அணிந்து பயிற்சி மேற்கொள்வர். கையில் கருப்பு நிற பட்டை அணிந்திருப்பர். மறைந்த 11 ரசிகர்களும் எங்களுடன் தான் எப்போதும் இருக்கின்றனர் என்பதற்கு அடையாளமாக, சின்னசாமி மைதானத்தில் 11 இருக்கைகளை நிரந்தரமாக காலியாக வைக்க திட்டமிட்டுள்ளோம்.
ரூ. 7 கோடி செலவு
ரசிகர்களை கட்டுப்படுத்த ரூ. 7 கோடி செலவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். மைதானம் முழுவதும் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்களின் வருகை
யாஷ் தயாள் விலகல்
பெங்களூரு அணியின் 'வேகப்புயல்' யாஷ் தயாள், வரும் பிரிமியர் தொடரில் பங்கேற்க மாட்டார். இவர் மீது இரு பெண்கள் பாலியல் புகார் கூறியதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி பெங்களூரு அணியின் இயக்குநர் மோ போபத் கூறுகையில்,''யாஷ் தயாள் தனிப்பட்ட பிரச்னையால் தவிக்கிறார். இத்தொடர் முழுவதும் 'மிஸ்' செய்வார். இவருக்கு ஆதரவாக இருப்போம். இவரை தக்க வைத்துள்ளோம். ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை,'' என்றார்.
