தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இளம் சென்னை சிங்கங்கள் * பிரஷாந்த் வீர், கார்த்திக் சர்மா * ரூ. 14.20 கோடிக்கு ஒப்பந்தம்

இளம் சென்னை சிங்கங்கள் * பிரஷாந்த் வீர், கார்த்திக் சர்மா * ரூ. 14.20 கோடிக்கு ஒப்பந்தம்

இளம் சென்னை சிங்கங்கள் * பிரஷாந்த் வீர், கார்த்திக் சர்மா * ரூ. 14.20 கோடிக்கு ஒப்பந்தம்


ADDED : டிச 16, 2025 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அபுதாபி: சென்னை அணி இம்முறை மாற்றி யோசித்தது. முன்பு 30+ வீரர்கள் அதிகம் இருந்ததால், 'டாடிஸ் ஆர்மி' என கேலி செய்தனர். நேற்றைய 'மினி' ஏலத்தில் 'ஆல்-ரவுண்டர்' பிரஷாந்த் வீர் 20, கீப்பர்-பேட்டர் கார்த்திக் சர்மா 19, என இரு 'அன்கேப்ட்' இளம் வீரர்களை கடும் போட்டியை சமாளித்து, தலா ரூ. 14.20 கோடிக்கு வாங்கியது. இவர்களது அடிப்படை ஏலத் தொகை ரூ. 30 லட்சம் தான். இதிலிருந்து 47.3 மடங்கு அதிகம் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. ஏற்கனவே ஆயுஷ் மாத்ரே 18, பிரவிஸ் 22, இருப்பதால், இளம் படையாக 2026ல் களமிறங்க உள்ளது.

அடுத்த ஜடேஜா

உ.பி.,யின் அமேதியில் பிறந்தவர் பிரஷாந்த் வீர். இடது கை பேட்டர், ஸ்பின் ஆல்-ரவுண்டர். 2025ல் உ.பி., 'டி-20' லீக்கில் நொய்டா அணிக்காக 3 அரைசதம் உட்பட 320 ரன் (ஸ்டிரைக் ரேட் 155.34) எடுத்து 'பினிஷிங்' திறமையை நிரூபித்தார். 8 விக்கெட்டும் வீழ்த்தினார். தற்போதைய சயத் முஷ்டாக் அலி தொடரில், 7 போட்டியில் 112 ரன், 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மாநில அளவிலான 23 வயதுக்கு உட்பட்டோர் (2025-26) கோப்பை தொடரில் 7 போட்டியில் 19 சிக்சர், 32 பவுண்டரி உட்பட 376 ரன் (சராசரி 94), 18 விக்கெட் (எகானமி 5.36) கைப்பற்றியுள்ளார். ரவிந்திர ஜடேஜா விடுவிக்கப்பட்ட நிலையில், சென்னை அணியின் அடுத்த ஜடேஜாவாக பிரஷாந்த் வீர் ஜொலிக்கலாம்.

அதிரடியாக ஆடும் இவரை 'மில்லர்' என செல்லமாக அழைக்கின்றனர். பிரஷாந்த் வீர் கூறுகையில்,''சென்னைக்காக விளையாட காத்திருக்கிறேன். தோனியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளேன்,''என்றார்.

'சிக்சர்' மன்னன்

ராஜஸ்தானை சேர்ந்தவர் விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மா. சிக்சர் அடிப்பதில் வல்லவர். கடந்த சீசனில் சென்னை அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். 12 முதல் தர 'டி-20' போட்டிகளில் 338 ரன் எடுத்த இவர், 28 சிக்சர் அடித்துள்ளார். இவர் கூறுகையில்,'' பேசுவதற்கு வார்த்தை இல்லை. தோனியுடன் விளையாடும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,'' என்றார்.

யார்... யார்

சென்னை அணி நேற்று வாங்கிய வீரர்கள்:

பிரஷாந்த் வீர் (ரூ. 14.20 கோடி), கார்த்தி சர்மா (ரூ. 14.20 கோடி), சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சகார் (ரூ. 5.20 கோடி), மாட் ஹென்றி (ரூ. 2 கோடி), அகியல் ஹொசைன் (ரூ. 3 கோடி), மாத்யூ ஷார்ட் (ரூ. 1.50 கோடி), அமன் கான் (ரூ. 40 லட்சம்). முதல் சுற்றில் விலை போகாத சர்பராஸ் கானையும் (ரூ. 75 லட்சம்) சென்னை வாங்கியது.



சாதனை தொகை

பிரிமியர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 'அன்கேப்ட்' (சர்வதேச போட்டியில் விளையாடாதவர்) வீரர் பட்டியலில் முதலிடத்தை (தலா ரூ. 14.20 கோடி) பகிர்ந்து கொண்ட பிரஷாந்த் வீர், கார்த்திக் சர்மா சாதனை படைத்தனர். இதற்கு முன் அவேஷ் கான் ரூ. 10 கோடிக்கு (லக்னோ, 2022) ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us