தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சென்னைக்கு கடைசி வாய்ப்பு * இன்று குஜராத் அணியுடன் பலப்பரீட்சை

சென்னைக்கு கடைசி வாய்ப்பு * இன்று குஜராத் அணியுடன் பலப்பரீட்சை

சென்னைக்கு கடைசி வாய்ப்பு * இன்று குஜராத் அணியுடன் பலப்பரீட்சை


ADDED : மே 20, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: சென்னை அணி இன்று தனது கடைசி லீக் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது.

நடப்பு லீக் தொடரில் சென்னை அணி இதுவரை 13 போட்டியில் பங்கேற்றுள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ள டில்லி (2), மும்பை (2), கோல்கட்டா (1), லக்னோ (1) அணிகளுக்கு எதிராக மட்டும், 6 போட்டியில் வென்றது. 'டாப்-5' இடத்திலுள்ள எந்த அணியையும், நடப்பு தொடரில் சென்னை அணி வீழ்த்தவில்லை.

இன்று தனது கடைசி லீக் போட்டியில் இரண்டாவது இடத்திலுள்ள குஜராத்தை (16) சந்திக்கிறது சென்னை (12). 'பிளே ஆப்' செல்ல கடைசி வாய்ப்பாக, இன்று சென்னை அணி, சிறப்பான 'ரன்ரேட்' அடிப்படையில் வெற்றி பெற்றால் 14 புள்ளி பெறலாம். பின் மற்ற போட்டிகளின் முடிவுக்கு ஏற்ப அடுத்த சுற்று குறித்து தெரியவரும்.

பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் (13 போட்டி, 477 ரன்) எடுத்து நம்பிக்கை தருகிறார். கேப்டன் ருதுராஜ், இதுவரை 321 ரன் எடுத்திருந்தாலும், அதிகபந்துகளை வீணடித்து அதிர்ச்சி தருகிறார். கார்த்திக் சர்மா (276), ஷிவம் துபே (223), உர்வில் படேல் (129), பெரிதும் நம்பப்பட்ட பிரவிஸ் (143) என யாரும் நிலையான, நம்பிக்கையான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. இது ஒட்டுமொத்த அணிக்கும் பாதிப்பு தருகிறது.

பந்துவீச்சில் கம்போஜ் (20 விக்.,) கடந்த சில போட்டிகளில் அதிக ரன் விட்டுத்தருகிறார். ஓவர்டன் (14) இல்லாததும் பாதிப்பு தருகிறது. நுார் அகமது (13), அகீல் ஹுசைன் (8) என சுழற்பந்து வீச்சாளர்கள், எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தால் நல்லது.

'டாப்-2' நம்பிக்கை

குஜராத் அணி இன்று அதிக 'ரன்ரேட்' அடிப்படையில் வென்றால், புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடத்தை பெறலாம். இதனால் பைனலுக்கு செல்ல இரு வாய்ப்பு கிடைக்கும்.

கேப்டன் சுப்மன் கில் (552), சாய் சுதர்சன் (554), பட்லர் (412) என 'டாப்-3' பேட்டர்கள் சிறந்த 'பார்மில்' உள்ளது, சொந்தமண்ணில் களமிறங்குவது கூடுதல் பலம். அடுத்து வாஷிங்டன் சுந்தர் (296) தவிர, மற்ற பேட்டர்கள் யாரும் பெரியளவு சோபிக்காதது பலவீனம்.

பந்துவீச்சில் ரபாடா (21), சிராஜ் (14) கூட்டணி மிரட்டுகிறது. சுழலில் அனுபவ ரஷித் கான் (16) கைகொடுக்கிறார். தவிர ஹோல்டரும் (13) உதவுகிறார்.



யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 9 போட்டியில் மோதின. இதில் சென்னை 4, குஜராத் 5 போட்டியில் வென்றன. கடைசியாக மோதிய 3 போட்டியில் குஜராத் 2, சென்னை 1ல் வெற்றி பெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us