தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தொடருமா சென்னை வெற்றி * மீண்டும் லக்னோவுடன் பலப்பரீட்சை

தொடருமா சென்னை வெற்றி * மீண்டும் லக்னோவுடன் பலப்பரீட்சை

தொடருமா சென்னை வெற்றி * மீண்டும் லக்னோவுடன் பலப்பரீட்சை


ADDED : மே 14, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: லக்னோவில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை, லக்னோ அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை அணி துவக்கத்தில் 3 போட்டியில் ஏமாற்றியது. பின் சுதாரித்த சென்னை அணி, அடுத்த 8 போட்டியில் 6 ல் வென்று, 12 புள்ளியுடன் 5வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டியிலும் வென்றால் 18 புள்ளியுடன் எவ்வித சிக்கலும் இன்றி, 'பிளே ஆப்' செல்லலாம். மாறாக 2ல் மட்டும் வென்றால் 16 புள்ளி பெற நேரிடும். பின் மற்ற அணிகளின் முடிவு, 'ரன் ரேட்' என பல்வேறு தடைகளை எதிர்கொள்ள நேரிடும்.

பேட்டிங்கில் சென்னை அணிக்கு, இதுவரை 2 சதம் அடித்துள்ள சஞ்சு சாம்சன் (11 போட்டி, 430 ரன்) மீண்டும் உதவ காத்திருக்கிறார். கேப்டன் ருதுராஜ் (293) வேகமாக ரன் சேர்த்தால் நல்லது. 'மிடில் ஆர்டரில்' கடந்த முறை 13 பந்தில் அரைசதம் அடித்த உர்வில் படேல், மீண்டும் தனது மின்னல் வேக ரன் குவிப்பை வெளிப்படுத்தினால், சென்னை அணிக்கு மற்றொரு வெற்றி உறுதி.

இவருடன் கார்த்திக் சர்மா (8ல் 173) நம்பிக்கை தருகிறார். அடுத்து வரும் பிரவிஸ் (8ல் 74 ரன்) பெரிதும் ஏமாற்றுகிறார். இன்று மீண்டு வருவார் என நம்பலாம். 'இம்பேக்ட்' வீரர் ஷிவம் துபே (10ல் 165) 'பினிஷிங்' குறையை, மீண்டும் தீர்த்து வைக்க வேண்டும். தோனி (கால் தசைப் பிடிப்பு) வழக்கம் போல, 'லெவனில்' இடம் பெறுவது சந்தேகம்.

சபாஷ் கம்போஜ்

வேகப்பந்து வீச்சில் கம்போஜ் இதுவரை 19 விக்கெட் (11 போட்டி) சாய்த்துள்ளார். சுழலில் நுார் அகமது (12), அகீல் ஹூசைன் (7) தங்கள் பங்கிற்கு விக்கெட் வேட்டை நடத்தினால் நல்லது.

வருமா மாற்றம்

லக்னோ அணி 11 போட்டியில் 3ல் மட்டும் (8 தோல்வி) வென்று, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. பேட்டிங்கில் மிட்சல் மார்ஷ் (11ல் 377 ரன்), மட்டும் ஆறுதல் தருகிறார். கேப்டன் ரிஷாப் பன்ட் (251, மார்க்ரம் (231), நிக்கோலஸ் பூரன் (184) என பல அனுபவ வீரர்கள் இருந்த போதும், சீரற்ற பேட்டிங் காரணமாக ஒட்டுமொத்த அணியும் தடுமாறுகிறது.

'வேகத்தில்' அனுபவ ஷமி (9 விக்.,), பிரின்ஸ் யாதவ் (16), மொசின் கான் (10) உதவுகின்றனர். 'சுழலில்' திக்வேஷ் ரதி (8ல் 5), அசத்த ஷாபாஸ் அகமது (3ல் 4) பெரியளவு எடுபடாதது பலவீனம்.

இரு அணிகள் கடந்த மே 10ல் மோதிய போட்டியில் லக்னோ (203/8) இலக்கை, சென்னை (208/5) 'சேஸ்' செய்து அசத்தியது. இன்று சொந்தமண்ணில் லக்னோ அணி மாற்றம் தருமா அல்லது சென்னை வெற்றி தொடருமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சம பலத்தில்...

இரு அணிகள் மோதிய 7 போட்டியில் சென்னை 3, லக்னோ 3ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

* லக்னோவில் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும்.

ஓவர்டன் விலகல்

சென்னை அணி 'ஆல் ரவுண்டர்' ஓவர்டன் 32. 10 போட்டியில் 14 விக்கெட் சாய்த்த இவர், 136 ரன் எடுத்துள்ளார். வலது தொடையில் ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து விலகி, நாடு திரும்பினார். இவருக்குப் பதில் தென் ஆப்ரிக்க 'ஆல் ரவுண்டர்' தியன் பாரஸ்டர், ரூ. 75 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us