தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/டில்லி அணி சொதப்பல் ஆட்டம் * ஐதராபாத்திடம் வீழ்ந்தது

டில்லி அணி சொதப்பல் ஆட்டம் * ஐதராபாத்திடம் வீழ்ந்தது

டில்லி அணி சொதப்பல் ஆட்டம் * ஐதராபாத்திடம் வீழ்ந்தது


UPDATED : ஏப் 21, 2026 11:38 PM

ADDED : ஏப் 21, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2026 11:38 PM ADDED : ஏப் 21, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்: பவுலர்கள் ஏமாற்ற, டில்லி அணி 47 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்தது.

வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், பீல்டிங் தேர்வு செய்தார்.

சூப்பர் துவக்கம்

ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. போட்டியின் 5வது ஓவரை நிதிஷ் வீசினார். முதல் இரண்டு பந்தில் அபிஷேக், சிக்சர் விளாசினார். கடைசி பந்தில் ஹெட் ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 20 ரன் எடுக்கப்பட்டன. அபிஷேக், 25 பந்தில் 50 ரன்களை கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 97 ரன் எடுத்த நிலையில், அக்சர் பந்தில் அவுட்டானார் ஹெட் (37).

இஷான் நம்பிக்கை

கேப்டன் இஷான் கிஷான், அபிஷேக்குடன் இணைந்தார். குல்தீப் வீசிய போட்டியின் 11வது ஓவரில் இருவரும் ரன் மழை பொழிந்தனர். முதல் இரு பந்தில் இஷான், தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். 4வது பந்தை அபிஷேக், சிக்சருக்கு அனுப்ப, கடைசி பந்தில் மீண்டும் பவுண்டரி அடித்தார் இஷான். இதில் 22 ரன் கிடைத்தன. தொடர்ந்து மிரட்டிய அபிஷேக், நடராஜன், முகேஷ் பந்துகளையும் சிக்சருக்கு விரட்ட, ஐதராபாத் (13 ஓவர், 151/1) ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.

அபிஷேக் கலக்கல்

போட்டியின் 15 வது ஓவரை வீசினார் நிதிஷ். இதன் முதல் இரண்டு பந்தில் சிக்சர் அடித்த அபிஷேக், 47 பந்தில் சதம் எட்டினார். மறுபக்கம் இஷான் (25) ரன் அவுட்டானார். ஐதராபாத் 17 ஓவரில் 200 ரன்களை (202/2) கடந்தது.

நிகிடி ஓவரில் (18) 2 சிக்சர் அடித்த கிளாசன், முகேஷ் வீசிய கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 242/2 ரன் குவித்தது. அபிஷேக் 135 (68 பந்து, 10x6, 10x4), கிளாசன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

நிதிஷ் ஆறுதல்

டில்லி அணிக்கு பதும் நிசங்கா (8), ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. ராகுல் 37 ரன்னில் வெளியேறினார். போட்டியின் 11 வது ஓவரை வீசினார் ஈஷான் மலிங்கா. இதன் முதல் பந்தில் நிதிஷ் ராணா (30 பந்தில் 57 ரன்) அவுட்டானார். அடுத்த பந்தில் டேவிட் மில்லர் 'டக்' அவுட்டாக, டில்லி அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

தொடர்ந்து அசத்திய மலிங்கா, ஸ்டப்சையும் (27) பெவிலியன் அனுப்பி வைத்தார். அஷுதோஷ் (14) கைவிட, சமீர் ரிஸ்வி 41 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். டில்லி அணி 20 ஓவரில் 195/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

ஐதராபாத் சார்பில் மலிங்கா 4, ஹர்ஷ் துபே 3 விக்கெட் சாய்த்தனர்.

முதலிடம்

நேற்று அபிஷேக் 135 ரன் குவித்தார். இந்திய 'டி-20' அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்களில் முதலிடத்தை கோலியுடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 9 சதம் அடித்தனர். அடுத்த இரு இடத்தில் ரோகித் சர்மா (8), இஷான் கிஷான் (7), ராகுல் (7) உள்ளனர்.

* 'டி-20' அரங்கில் அதிகமுறை 130 ரன்னுக்கும் மேல் அடித்த வீரர்களில் அபிஷேக் (4) முதலிடம் பெற்றார். கிறிஸ் கெய்ல் (3), ஆரோன் பின்ச் (3) அடுத்து உள்ளனர்.

* கிரிக்கெட் லீக் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர்களில் அபிஷேக் (2025ல் 141, 2026ல் 135) 3, 5வது இடம் பெற்றார். முதல் 2 இடத்தில் கெய்ல் (2013ல் 175), பிரண்டன் மெக்கலம் (2008ல் 158) உள்ளனர். குயின்டன் டி காக் (2022ல் 140) 4வதாக உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us