தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இரானி கோப்பை: ஸ்மரன் சதம்

இரானி கோப்பை: ஸ்மரன் சதம்

இரானி கோப்பை: ஸ்மரன் சதம்


ADDED : அக் 03, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2026 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: இரானி கோப்பையில் ஸ்மரன் சதம் விளாச, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி முன்னிலை பெற்றது.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில், இரானி கோப்பை முதல்தர கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' 237, ஜம்மு-காஷ்மீர் 278 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி 2வது இன்னிங்சில் 24/1 ரன் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் சனத் சங்வான் (55) அரைசதம் கடந்தார். சுதிப் குமார் (33), சரன்ஷ் ஜெயின் (25) ஓரளவு கைகொடுத்தனர். சர்பராஸ் கான் (0) ஏமாற்றினார். மானவ் சுதார் (16), கேப்டன் ரிஷாப் பன்ட் (8) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய ரவிச்சந்திரன் ஸ்மரன் சதம் விளாசினார்.

ஆட்டநேர முடிவில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி 2வது இன்னிங்சில் 306/8 ரன் எடுத்து, 265 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஸ்மரன் (126), முகேஷ் சவுத்ரி (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஜம்மு-காஷ்மீர் அணி சார்பில் உமர் நசிர் மிர், சாஹில் லோட்ரா தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us