ADDED : அக் 02, 2026 10:48 PM

ஸ்ரீநகர்: இரானி கோப்பை போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணி முன்னிலை பெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில், ரஞ்சி கோப்பை 'நடப்பு சாம்பியன்' ஜம்மு-காஷ்மீர், ரிஷாப் பன்ட் தலைமையிலான 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி முதல் இன்னிங்சில் 237 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஜம்மு-காஷ்மீர் அணி 21/2 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் பராஸ் தோக்ரா (75), அப்துல் சமத் (57), லோன் நசிம் (64) கைகொடுக்க, ஜம்மு-காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 278/10 ரன் எடுத்தது. 'ரெஸ்ட் ஆப் இந்தியா' சார்பில் முகேஷ் சவுத்ரி 5, ஆகாஷ் தீப், முகேஷ் குமார் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஆட்டநேர முடிவில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி 2வது இன்னிங்சில் 24/1 ரன் எடுத்து, 17 ரன் பின்தங்கி இருந்தது. சங்வான் (10), சுதிப் குமார் (10) அவுட்டாகாமல் இருந்தனர். ஜம்மு-காஷ்மீர் சார்பில் சுனில் குமார் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
