/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இரானி கோப்பை: விதர்பா 'சாம்பியன்'
/
இரானி கோப்பை: விதர்பா 'சாம்பியன்'
ADDED : அக் 05, 2025 10:13 PM

நாக்பூர்: இரானி கோப்பை போட்டியில் 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா அணி சாம்பியன் ஆனது.
நாக்பூரில், இரானி கோப்பை கிரிக்கெட் (முதல் தரம்) 62வது சீசன் நடந்தது. இதில், 'நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன்' விதர்பா, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் விதர்பா 342, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' 214 ரன் எடுத்தன. விதர்பா அணி 2வது இன்னிங்சில் 232 ரன் எடுத்தது. நான்காம் நாள் முடிவில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி, 2வது இன்னிங்சில் 30/2 ரன் எடுத்திருந்தது.
ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டத்தில் கேப்டன் ரஜத் படிதர் (10), ருதுராஜ் கெய்க்வாட் (7) சோபிக்கவில்லை. இஷான் கிஷான் (35), சரண்ஷ் ஜெயின் (29) ஓரளவு கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய யாஷ் துல் (92), மானவ் சுதர் (56*) அரைசதம் கடந்தனர். அன்ஷுல் கம்போஜ் (0), ஆகாஷ் தீப் (3) ஏமாற்றினர்.
'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி 2வது இன்னிங்சில் 267 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. விதர்பா சார்பில் ஹர்ஷ் துபே 4 விக்கெட் சாய்த்தார். விதர்பா அணி 3வது முறையாக (2017-18, 2018-19, 2025-26) இரானி கோப்பை வென்றது.