ADDED : செப் 23, 2024 11:05 PM

மும்பை: ஈரானி கோப்பை போட்டிக்கான மும்பை அணிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார்.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ஈரானி கோப்பை முதல் தர போட்டி நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த 61 போட்டிகளில் ரெஸ்ட் ஆப் இந்தியா 30 முறை கோப்பை வென்றது. மும்பை (14), கர்நாடகா (6) அடுத்து உள்ளன.
இதன் 62 வது போட்டி அக். 1-5ல் லக்னோவில் நடக்க உள்ளது. ரஞ்சி கோப்பை சாம்பியன் மும்பை, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் மோத உள்ளன. இதற்கான மும்பை அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட உள்ளார். இந்த சீசனில் மும்பைக்கு ரஞ்சி கோப்பை வென்று தந்ததைப் போல, இந்திய அணி வீரர்கள் இடம் பெறும் வலிமையான ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக, ரகானே அனுபவம் கைகொடுக்கும் என மும்பை நிர்வாகம் நம்புகிறது.
தவிர ஸ்ரேயாஸ், கணுக்கால் ஆப்பரேஷனுக்குப் பின் மீண்டு வந்துள்ள 'ஆல் ரவுண்டர்' ஷர்துல் தாகூர் வருகை, மும்பை அணிக்கு கைகொடுக்க காத்திருக்கிறது.