/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அணி மாறும் அஷ்வின்: சென்னை அணியில் இருந்து
/
அணி மாறும் அஷ்வின்: சென்னை அணியில் இருந்து
UPDATED : ஆக 08, 2025 08:47 PM
ADDED : ஆக 08, 2025 08:39 PM

சென்னை: சென்னை அணியில் இருந்து அஷ்வின் விலக உள்ளார்.
முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 38. தமிழகத்தை சேர்ந்த இவர், பிரிமியர் லீக் அரங்கில் சென்னை (2008-15), புனே (2016), பஞ்சாப் (2018-19), டில்லி (2020-21), ராஜஸ்தான் (2022-24) அணிகளுக்காக விளையாடினார். கடந்த ஆண்டு நடந்த பிரிமியர் லீக் 18வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ. 9.75 கோடிக்கு சென்னை அணியில் ஒப்பந்தமானார். இம்முறை 9 போட்டியில், 7 விக்கெட் மட்டும் சாய்த்தார்.
இந்நிலையில், தன்னை விடுவிக்குமாறு சென்னை அணி நிர்வாகத்திடம் அஷ்வின் கோரிக்கை வைத்துள்ளதாகவும், மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணையப்போவதாகவும் தகவல் வெளியானது. சமீபத்தில், கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியில் இருந்து விலகி சென்னை அணிக்காக விளையாடப் போவதாக கூறப்பட்டது. இதனையடுத்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் 'டிரேடு' முறையில் அஷ்வின், சஞ்சு சாம்சனை மாற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சீசனுக்கு, வீரர்களை தக்கவைக்க, விடுவிக்க அல்லது 'டிரேடு' முறையில் மாற்றிக் கொள்ள வரும் நவம்பர் வரை கால அவகாசம் இருப்பதால், சென்னை அணியில் அஷ்வின் நீடிப்பாரா, வேறு அணியில் இணைவாரா என்பது பின்னர் தெரியவரும்.