தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தோல்விக்கு தோனி காரணமா

தோல்விக்கு தோனி காரணமா

தோல்விக்கு தோனி காரணமா


ADDED : மே 04, 2025 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 10:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பெங்களூருவுக்கு எதிரான தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்,'' என, சென்னை கேப்டன் தோனி தெரிவித்தார்.

பெங்களூருவில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி (211/5), 2 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் (213/5) அதிர்ச்சி தோல்வியடைந்தது. இப்போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. யாஷ் தயாள் பந்து வீசினார். அப்போது களத்தில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா இருந்தனர்.

கடந்த 2023 பிரிமியர் தொடரில் கோல்கட்டா வெற்றிக்கு 6 பந்தில் 29 ரன் தேவைப்பட்டன. அப்போது குஜராத் அணியில் இருந்த யாஷ் தயாள் பந்து வீசினார். இதில் ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்சர் அடிக்க கோல்கட்டா வெற்றி பெற்றது. இதுபோல சென்னை அணியை தோனி கரை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதல் பந்தில் ஒரு ரன் மட்டும் எடுத்த தோனி (12), 3வது பந்தில் ஆட்டமிழந்தார். 'நோ-பாலாக' வீசப்பட்ட 4வது பந்தை ஷிவம் துபே சிக்சருக்கு அனுப்ப, 3 பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. ஆனால் 3 ரன் (1,1,1) மட்டும் எடுக்கப்பட்டது. சென்னை அணி 2 ரன்னில் தோல்வியடைந்தது.

இதுகுறித்து தோனி கூறுகையில், ''நான், கடைசி கட்டத்தில் அதிவிரைவாக ரன் குவித்திருந்தால், மற்றவர்களுக்கு நெருக்கடி குறைந்திருக்கும். தவறு செய்துவிட்டேன். இத்தோல்விக்கு வேறு யார் மீதும் பழிசுமத்த விரும்பவில்லை. நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us