/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இஷான் கிஷான் மறுப்பு * டெஸ்ட் போட்டியில் பங்கேற்க...
/
இஷான் கிஷான் மறுப்பு * டெஸ்ட் போட்டியில் பங்கேற்க...
இஷான் கிஷான் மறுப்பு * டெஸ்ட் போட்டியில் பங்கேற்க...
இஷான் கிஷான் மறுப்பு * டெஸ்ட் போட்டியில் பங்கேற்க...
ADDED : மார் 02, 2024 10:17 PM

புதுடில்லி: இங்கிலாந்து டெஸ்டில் விளையாட மறுத்ததால், சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் நீக்கப்பட்டார் என தெரியவந்துள்ளது.
இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 25. விளையாடும் லெவன் அணியில் களமிறங்க போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில், தானாக ஓய்வு கேட்டு விலகினார். ரஞ்சி கோப்பை போட்டிகளில் பங்கேற்றால் மீண்டும் இஷான் அணிக்கு திரும்பலாம் என பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்தார். பி.சி.சி.ஐ., தரப்பிலும் 'அட்வைஸ்' செய்யப்பட்டன. இவை எதையும் கண்டு கொள்ளாத இஷான், மும்பை ஐ.பி.எல்., அணியில் சாதிக்க, ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.
புதிய தகவல்
இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பர் பரத் தொடர்ந்து ஏமாற்றினார். இதனால் மீண்டும் இஷானை அணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு, அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க இன்னும் தயாராகவில்லை என தெரிவித்துள்ளார் இஷான். இதன் பிறகு தான் துருவ் ஜுரல் விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் வெகுண்டு எழுந்த பி.சி.சி.ஐ., தனது சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷானை நீக்கியது என தற்போது தெரியவந்துள்ளது.

