தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஜெய்ஸ்வால் 'நம்பர்-4': டெஸ்ட் தரவரிசையில் பின்னடைவு

ஜெய்ஸ்வால் 'நம்பர்-4': டெஸ்ட் தரவரிசையில் பின்னடைவு

ஜெய்ஸ்வால் 'நம்பர்-4': டெஸ்ட் தரவரிசையில் பின்னடைவு


ADDED : டிச 04, 2024 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2024 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஜெய்ஸ்வால், 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 825 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

நியூசிலாந்துக்கு எதிரான கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் 171 ரன் விளாசிய இங்கிலாந்தின் ஹாரி புரூக், 854 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (895 புள்ளி) நீடிக்கிறார். மூன்றாவது இடத்தை நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (830) தக்கவைத்துக் கொண்டார். இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட் (736) 6வது இடத்தில் தொடர்கிறார்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் பும்ரா (883) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் அஷ்வின் (807) 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (423 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் அஷ்வின் (290) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென் ஆப்ரிக்காவின் மார்கோ யான்சென், 291 புள்ளிகளுடன் 12வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். இலங்கைக்கு எதிரான டர்பன் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட் சாய்த்த யான்சென், பவுலர்களுக்கான தரவரிசையில் 774 புள்ளிகளுடன் 28வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us