தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஜெய்ஸ்வால் 'நம்பர்-12': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

ஜெய்ஸ்வால் 'நம்பர்-12': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

ஜெய்ஸ்வால் 'நம்பர்-12': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்


ADDED : பிப் 28, 2024 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 10:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஜெய்ஸ்வால் 12வது இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 727 புள்ளிகளுடன் 15வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடந்த 4வது டெஸ்டில் பேட்டிங்கில் அசத்திய இவர், 73, 37 ரன் எடுத்தார். இந்திய கேப்டன் ரோகித் (720) 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ராஞ்சி டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது (90, 39 ரன்) வென்ற இந்தியாவின் துருவ் ஜுரல் (461 புள்ளி) 31 இடங்கள் முன்னேறி 69வது இடத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் சதம் விளாசிய இங்கிலாந்தின் ஜோ ரூட் (799) 'நம்பர்-3' இடத்துக்கு முன்னேறினார். முதலிரண்டு இடங்களில் நியூசிலாந்தின் வில்லியம்சன் (893), ஸ்டீவ் ஸ்மித் (818) உள்ளனர்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் 846 புள்ளிகளுடன் 'நம்பர்-2' இடத்தில் நீடிக்கிறார். ராஞ்சி டெஸ்டின் 2வது இன்னிங்சில் 'சுழலில்' அசத்திய இவர் 5 விக்கெட் சாய்த்தார். முதலிடத்தை இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (867) தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் (552) 10 இடங்கள் முன்னேறி 32வது இடத்தை வெஸ்ட் இண்டீசின் அல்ஜாரி ஜோசப் உடன் பகிர்ந்து கொண்டார்.

'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (449), அஷ்வின் (323) முதலிரண்டு இடத்தில் நீடிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us