UPDATED : ஜன 03, 2025 11:15 PM
ADDED : ஜன 02, 2025 11:14 PM

சிட்னி: ஐந்தாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்தியாவின் பும்ரா, ஆஸ்திரேலியாவின் கான்ஸ்டாஸ், வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. பும்ரா வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடித்தார் கான்ஸ்டாஸ். அடுத்து, 3வது ஓவரை வீசினார் பும்ரா. இம்முறை பந்தை எதிர்கொள்ளாமல் தாமதம் செய்தார் கவாஜா.
இதனால், கோபமான பும்ரா, இப்படி செய்தால் எப்படி என கேட்டார். உடனே, அம்பயர் அருகில் இருந்த கான்ஸ்டாஸ், பும்ராவை நோக்கி ஏதோ பேசிக் கொண்டே செல்ல, பும்ராவும் அவரை நோக்கிச் செல்ல பதட்டம் ஏற்பட்டது. அம்பயர் தலையிட்டு சமாதானம் செய்தாார். பின் பும்ரா பந்தில் கவாஜா, அவுட்டாக, கான்ஸ்டாசை நோக்கி வேகமாகச் சென்றார். அப்படியே நின்று சக வீரர்களிடம் திரும்பி, மகிழ்ச்சியை கொண்டாடினார்.