/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பயிற்சியாளராக ஜெயசூர்யா: இலங்கை அணிக்கு நியமனம்
/
பயிற்சியாளராக ஜெயசூர்யா: இலங்கை அணிக்கு நியமனம்
ADDED : ஜூலை 08, 2024 10:11 PM

கொழும்பு: இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமிக்கப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட் இருந்தார். சமீபத்தில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடந்த 'டி-20' உலக கோப்பையில் இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இதனையடுத்து சில்வர்வுட், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் இலங்கை செல்லும் இந்திய அணி, மூன்று 'டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதன்பின் இங்கிலாந்து செல்லும் இலங்கை அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதனையடுத்து, 'டி-20' உலக கோப்பையில் இலங்கை அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா 55, இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவர், இங்கிலாந்து தொடர் வரை இப்பதவியில் நீடிப்பார் என இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயசூர்யா, 110 டெஸ்ட் (6973 ரன், 14 சதம்), 445 ஒருநாள் (13430 ரன், 28 சதம்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 1996ல் இலங்கை அணி உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய இவர், இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டார். தவிர இவர், 2010-15ல் எம்.பி.,யாக இருந்தார்.