/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கர்நாடகா அணி ரன் குவிப்பு: ராகுல், தேவ்தத் படிக்கல் சதம்
/
கர்நாடகா அணி ரன் குவிப்பு: ராகுல், தேவ்தத் படிக்கல் சதம்
கர்நாடகா அணி ரன் குவிப்பு: ராகுல், தேவ்தத் படிக்கல் சதம்
கர்நாடகா அணி ரன் குவிப்பு: ராகுல், தேவ்தத் படிக்கல் சதம்
ADDED : பிப் 15, 2026 11:23 PM

லக்னோ: ரஞ்சி கோப்பை அரையிறுதியில், கர்நாடகாவின் ராகுல், தேவ்தத் படிக்கல் சதம் விளாசினர்.
லக்னோவில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் அரையிறுதியில் கர்நாடகா, உத்தரகாண்ட் அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற உத்தரகாண்ட் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
கர்நாடகா அணிக்கு மயங்க் அகர்வால் (5) ஏமாற்றினார். பின் இணைந்த லோகேஷ் ராகுல், கேப்டன் தேவ்தத் படிக்கல் ஜோடி கைகொடுத்தது. அபாரமாக ஆடிய ராகுல், முதல் தர போட்டியில் தனது 25வது சதத்தை பதிவு செய்தார். ஜெகதீஷா சுசித் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய படிக்கல், தன்பங்கிற்கு சதம் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 278 ரன் சேர்த்த போது ராகுல் (141) அவுட்டானார்.
ஆட்டநேர முடிவில் கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 355/2 ரன் எடுத்திருந்தது. படிக்கல் (148), கருண் நாயர் (37) அவுட்டாகாமல் இருந்தனர். உத்தரகாண்ட் சார்பில் ஆதித்யா ரவாத் 2 விக்கெட் கைப்பற்றினார்.
சுதிப் சதம்
மேற்கு வங்கத்தின் கல்யாணியில் நடக்கும் 2வது அரையிறுதியில் பெங்கால், ஜம்மு காஷ்மீர் அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற ஜம்மு காஷ்மீர் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. பெங்கால் அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (49), ஷாபாஸ் அகமது (42) கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய சுதிப் குமார் கராமி சதம் விளாசினார். ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 249/5 ரன் எடுத்திருந்தது. சுதிப் (136) அவுட்டாகாமல் இருந்தார்.

