UPDATED : டிச 20, 2025 10:02 PM
ADDED : டிச 20, 2025 03:25 PM

மவுன்ட் மவுன்கனுய்: கவேம் ஹாட்ஜ் சதம் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவிலிருந்து மீண்டது.
நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட், மவுன்ட் மவுன்கனுயில் நடக்கிறது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 575/8 ('டிக்ளேர்') ரன் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 110/0 ரன் எடுத்திருந்தது. கேம்பெல் (45), பிரண்டன் கிங் (55) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜேக்கப் டபி 'வேகத்தில்' கேம்பெல் (45), பிரண்டன் கிங் (63) வெளியேறினர். டெவின் இம்லாச் (27) நிலைக்கவில்லை. அலிக் அதானஸ் (45), ஜஸ்டின் கிரீவ்ஸ் (43) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் ராஸ்டன் சேஸ் (2) ஏமாற்றினார்.
மறுமுனையில் பொறுப்பாக ஆடிய கவேம் ஹாட்ஸ், டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார்.
ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 381/6 ரன் எடுத்து, 194 ரன் பின்தங்கி இருந்தது. தவிர, 'பாலோ-ஆன்' தவிர்த்தது. ஹாட்ஜ் (109), ஆண்டர்சன் பிலிப் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
