தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ரோகித், கோலிக்கு பாராட்டு

ரோகித், கோலிக்கு பாராட்டு

ரோகித், கோலிக்கு பாராட்டு


ADDED : பிப் 07, 2024 10:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 10:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ''உலகின் சிறந்த வீரர் கோலி, அபாயகரமான வீரர் ரோகித் சர்மா,'' என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 33. கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர் (24 விக்.,). தற்போது கணுக்கால் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். இந்திய அணி வீரர்கள் கோலி, ரோகித் குறித்து அவர் கூறியது:

உலகின் சிறந்த பேட்டர் கோலி. பல்வேறு சாதனைகளை தகர்த்துள்ளார். அதேநேரம் ரோகித் சர்மா, அபாயகரமான பேட்டராக திகழ்கிறார். கேப்டன் என்ற முறையில் தோனி, ரோகித் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டுள்ளனர். இருவரையும் ஒப்பிடும் போது, யார் வெற்றிகரமாக செயல்பட்டார் என்று தான் எல்லோரும் பார்ப்பர்.

இதன் அடிப்படையில் தோனி தான் சிறந்த கேப்டன். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இவர் செய்த சாதனையை யாரும் அவ்வளவு எளிதில் அடைந்து விட முடியாது.

இவ்வாறு ஷமி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us