/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சோதனை 'சுழலில்' குல்தீப் யாதவ்: 'லெவன்' அணியில் இடம் கிடைக்குமா
/
சோதனை 'சுழலில்' குல்தீப் யாதவ்: 'லெவன்' அணியில் இடம் கிடைக்குமா
சோதனை 'சுழலில்' குல்தீப் யாதவ்: 'லெவன்' அணியில் இடம் கிடைக்குமா
சோதனை 'சுழலில்' குல்தீப் யாதவ்: 'லெவன்' அணியில் இடம் கிடைக்குமா
ADDED : அக் 16, 2025 09:46 PM

பெர்த்: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய 'லெவன்' அணியில் குல்தீப் இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது.
இந்திய அணியின் சிறந்த மணிக்கட்டு 'ஸ்பின்னர்' குல்தீப் யாதவ், 30. மூன்றுவித கிரிக்கெட்டிலும் அசத்துகிறார். சர்வதேச அளவில் 15 டெஸ்ட் (68 விக்கெட்), 113 ஒருநாள் போட்டி (181), 47 'டி-20' போட்டிகளில் (86) சேர்த்து 335 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 2017ல் டெஸ்டில் அறிமுகமானார். அப்போது அஷ்வின், ஜடேஜா என இரு 'ஸ்பின்னர்'கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் 8 ஆண்டுகளில் குல்தீப் 15 டெஸ்டில் மட்டுமே பங்கேற்க முடிந்தது.
'ஆசிய' நாயகன்: அஷ்வின் ஓய்வு பெற்றதால், தற்போது இந்திய அணியில் இடம் பெறுகிறார். ஆசிய கோப்பை 'டி-20' தொடரில் 17 விக்கெட் (7 போட்டி) வீழ்த்தி, இந்தியாவின் சாம்பியன் கனவை நனவாக்கினார். சமீபத்திய வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 12 விக்கெட் (2 போட்டி) வீழ்த்தி, இந்திய வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தார். அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் (அக்.19-25) இடம் பெற்றுள்ளார். இம்முறை விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினம். 'ஆல்-ரவுண்டர்களுக்கு' முக்கியத்துவம் தரப்படலாம். 'சுழல் மாயாவியான' குல்தீப் வாய்ப்பு பெறுவாரா அல்லது புறக்கணிக்கப்படுவாரா என்பது 'மில்லியன் டாலர்' கேள்வியாக உள்ளது.
முந்தும் ஹர்ஷித்: இது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,''ஆஸ்திரேலிய தொடரில் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். பேட்டிங் வரிசையில் துவக்க வீரர்களாக புதிய கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மா, 3வது இடத்தில் கோலி களமிறங்குவர், 4, 5வது இடத்தில் ஷ்ரேயஸ், ராகுல் வரலாம். காயம் அடைந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதில் 6வது இடத்தை நிதிஷ் குமார் பிடிப்பார்.
பந்துவீச்சை பொறுத்தவரை அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் என இரு 'சுழல்' ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். இவர்கள் பேட்டிங்கில் கைகொடுப்பர் என்பதால், விளையாடும் 'லெவனில்' குல்தீப் இடம் பெற வாய்ப்பு குறைவு. 'வேகப்புயல்' பும்ராவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்ட நிலையில், சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா களமிறக்கப்படலாம்,''என்றார்.