/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
குல்தீப் யாதவ் 'நம்பர்-14': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
/
குல்தீப் யாதவ் 'நம்பர்-14': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
குல்தீப் யாதவ் 'நம்பர்-14': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
குல்தீப் யாதவ் 'நம்பர்-14': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : அக் 15, 2025 10:35 PM

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் 14வது இடத்துக்கு முன்னேறினார்.
டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ், 689 புள்ளிகளுடன் 21வது இடத்தில் இருந்து முதன்முறையாக 14வது இடத்துக்கு முன்னேறினார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டில்லி டெஸ்டில் 'சுழலில்' அசத்திய இவர், இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் சாய்த்து, ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (882 புள்ளி) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய பவுலர் முகமது சிராஜ் (726) 12வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
பேட்டர் தரவரிசையில் இந்திய துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 791 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் இருந்து 'நம்பர்-5' இடத்துக்கு முன்னேறினார். டில்லி டெஸ்டில் பேட்டிங்கில் அசத்திய ஜெய்ஸ்வால், 175 ரன் விளாசினார். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (908) தொடர்கிறார். இந்திய கேப்டன் சுப்மன் கில் (733) 13வது இடத்தில் உள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில், தொடர் நாயகன் விருதை (104 ரன், 8 விக்கெட்) தட்டிச் சென்ற இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 426 புள்ளிகளுடன் 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.