/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது ஆப்கானிஸ்தான்: வங்கம் 'ஹாட்ரிக்' தோல்வி
/
கோப்பை வென்றது ஆப்கானிஸ்தான்: வங்கம் 'ஹாட்ரிக்' தோல்வி
கோப்பை வென்றது ஆப்கானிஸ்தான்: வங்கம் 'ஹாட்ரிக்' தோல்வி
கோப்பை வென்றது ஆப்கானிஸ்தான்: வங்கம் 'ஹாட்ரிக்' தோல்வி
ADDED : அக் 15, 2025 10:33 PM

அபுதாபி: வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. மூன்றாவது போட்டியில் 200 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான்.
யு.ஏ.இ., சென்ற வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றன. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆப்கானிஸ்தான் 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி அபுதாபியில் நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஜத்ரன் (95), முகமது நபி (62*), ரஹ்மானுல்லா குர்பாஸ் (42) கைகொடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 293 ரன் எடுத்தது.
கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு சைப் ஹசன் (43) மட்டும் ஆறுதல் தந்தார். முகமது நைம் (7), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (3), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (6) உள்ளிட்ட மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். வங்கதேச அணி 27.1 ஓவரில் 93 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் பிலால் சமி 5, ரஷித் கான் 3 விக்கெட் சாய்த்தனர்.
ஆட்ட நாயகன் விருதை பிலால் சமி (5 விக்.,), தொடர் நாயகன் விருதை இப்ராஹிம் ஜத்ரன் (213 ரன்) கைப்பற்றினர்.