/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சதம் விளாசினார் இஷான் கிஷான் * தமிழக பவுலர்கள் ஏமாற்றம்
/
சதம் விளாசினார் இஷான் கிஷான் * தமிழக பவுலர்கள் ஏமாற்றம்
சதம் விளாசினார் இஷான் கிஷான் * தமிழக பவுலர்கள் ஏமாற்றம்
சதம் விளாசினார் இஷான் கிஷான் * தமிழக பவுலர்கள் ஏமாற்றம்
ADDED : அக் 15, 2025 10:20 PM

கோவை: ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழக பவுலர்கள் ஏமாற்ற, சதம் விளாசினார் இஷான் கிஷான்.
இந்தியாவின் முன்னணி முதல் தர தொடர் ரஞ்சி கோப்பை. இதன் 91 வது சீசன் நேற்று நாடு முழுவதும் துவங்கியது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று, முதல் நாள் ஆட்டம் நடந்தன.
தமிழகத்தின் கோயம்புத்துாரில் துவங்கிய 'எலைட் குரூப் ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற ஜார்க்கண்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இஷான் அபாரம்
ஜார்க்கண்ட் அணி துவக்கத்தில் திணறியது. தமிழகத்தின் குர்ஜப்னீத் சிங் 'வேகத்தில்' ஷிகர் மோகன் (10), விராத் சிங் (28), ஷரன்தீப் சிங் (48) சிக்கினர். ஜார்க்கண்ட் அணி 157/6 என திணறியது. பின் இஷான் கிஷான், சாஹில் ராஜ் இணைந்து அணியை மீட்டனர்.
இஷான் சதம் விளாசினார். சாஹில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தமிழக பவுலர்கள் திணறினர். முதல் நாள் முடிவில் ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 307/6 ரன் எடுத்திருந்தது. இஷான் (125), சாஹில் (64) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகத்தில் குர்ஜப்னீத், 3 விக்கெட் சாய்த்தார்.
மும்பை ரன் குவிப்பு
'டி' பிரிவில் ஜம்மு அண்டு காஷ்மீருக்கு எதிரான போட்டியில் (இடம்: ஸ்ரீநகர்) மும்பை அணி முதல் இன்னிங்சில் 336/5 ரன் எடுத்திருந்தது. சித்தேஷ் (116) சதம் அடித்தார்.
ராஜ்கோட்டில் நடக்கும் போட்டியில் (பி) சவுராஷ்டிராவுக்கு எதிராக முதலில் களமிறங்கிய கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 295/5 ரன் எடுத்தது. தேவ்தத் படிக்கல் (96), கருண் நாயர் (73) கைகொடுத்தனர்.
திருவனந்தபுரத்தில் நடக்கும் மற்றொரு 'பி' பிரிவு போட்டியில் மகாராஷ்டிரா, கேரளா மோதுகின்றன. ருதுராஜ் (91), சக்சேனா (49) சற்று கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 179/7 ரன் எடுத்தது.