sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

முதல் கோப்பை வென்றார் சுப்மன் கில்... * டில்லி டெஸ்டில் இந்தியா வெற்றி

/

முதல் கோப்பை வென்றார் சுப்மன் கில்... * டில்லி டெஸ்டில் இந்தியா வெற்றி

முதல் கோப்பை வென்றார் சுப்மன் கில்... * டில்லி டெஸ்டில் இந்தியா வெற்றி

முதல் கோப்பை வென்றார் சுப்மன் கில்... * டில்லி டெஸ்டில் இந்தியா வெற்றி


ADDED : அக் 14, 2025 10:50 PM

Google News

ADDED : அக் 14, 2025 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 518/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 'பாலோ-ஆன்' பெற்றது.

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவுக்கு 121 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 63/1 ரன் எடுத்திருந்தது.

ராகுல் அரைசதம்

நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய வெற்றிக்கு 58 ரன் மட்டும் தேவைப்பட்டன. ராஸ்டன் சேஸ் வலையில் சுதர்சன் (39), கேப்டன் சுப்மன் கில் (13) சிக்கினர். வாரிகன் பந்தில் 2 ரன் எடுத்த ராகுல், டெஸ்டில் 20வது அரைசதம் எட்டினார். வாரிகன் வீசிய அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த ராகுல், ஒரு மணி நேரத்தில் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 124/3 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. ராகுல் (58, 6x4, 2x6), துருவ் ஜுரல் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை குல்தீப் யாதவ் (5/82, 3/104) வென்றார். தொடர் நாயகன் விருதை 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா (104 ரன், 8 விக்.,) தட்டிச் சென்றார்.

10வது முறை

வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களை (2002-25) இந்தியா வென்றது. தொடர்ந்து அதிக டெஸ்ட் தொடரை வென்ற அணிகளின் பட்டியலில் தென் ஆப்ரிக்காவுடன் (10 முறை, எதிர், வெஸ்ட் இண்டீஸ்,1998-24) முதலிடத்தை பகிர்ந்து கொண்டது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா (9 முறை, எதிர், வெஸ்ட் இண்டீஸ், 2000-22) உள்ளது.

* வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக தொடர்ந்து 27வது டெஸ்டில் இந்தியா வென்றது.

* டில்லியில் தொடர்ந்து 14 டெஸ்டில் இந்தியாவை அசைக்க முடியவில்லை. இங்கு கடைசியாக 1987ல் வெஸ்ட் இண்டீசிடம் தோற்றது. இதற்கு பின் 1993ல் இருந்து பங்கேற்ற 14 டெஸ்டில் இந்தியா 12ல் வெற்றி பெற்றது. 2 போட்டியை 'டிரா' செய்தது.

* சொந்த மண்ணில் இந்தியா 122வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. உள்ளூரில் அதிக டெஸ்ட் வென்ற அணிகள் பட்டியலில் மூன்றாவது (122) இடத்திற்கு முன்னேறியது. முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலியா (262), இங்கிலாந்து (241) உள்ளன.

தொடரும் சோகம்

இந்திய மண்ணில் தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த அணிகள் பட்டியலில் இலங்கை (1986-94), நியூசிலாந்துடன் (2010-16) இரண்டாவது இடத்தை வெஸ்ட் இண்டீஸ் (2013-25) பகிர்ந்து கொண்டது. இவை தொடர்ந்து தலா 6 தோல்விகளை சந்தித்தன. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (7 தோல்வி, 2008-13) உள்ளது.

கடின உழைப்பு

இந்திய கேப்டன் சுப்மன் கில், முதல் டெஸ்ட் தொடரை (2-0, எதிர், வெ.இ.,) வென்றார். முன்னதாக இங்கிலாந்து தொடரை 2-2 என சமன் செய்தார். பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,''கடினமான இங்கிலாந்து தொடரிலேயே கேப்டனாக தேறிவிட்டார் சுப்மன். தகுதியின் அடிப்படையில் டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். களத்தில் கடினமாக உழைக்கிறார். அணியை சிறப்பாக வழிநடத்துகிறார்,''என்றார்

ஆடுகளம் சரியில்லை

டில்லி டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் மந்தமாக இருந்தது. இதனால் 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீசின் கேம்பல், ஷாய் ஹோப் சதம் அடித்தனர். அடுத்து நடக்க உள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் இத்தகைய ஆடுகளம் அமைக்கப்பட்டால் சிக்கல் ஏற்படலாம். மார்க்ரம், ரிக்கிள்டன், பிரவிஸ், முல்டர், ஸ்டப்ஸ் போன்ற தென் ஆப்ரிக்க வீரர்கள் எளிதாக ரன் சேர்த்துவிடுவர்.

இந்திய பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,''டில்லி ஆடுகளத்தை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். வேகப்பந்துவீச்சு எதிர்பார்த்த அளவு எடுபடவில்லை. பந்துகள் 'பவுன்ஸ்' ஆகவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுக்க விரும்பினால், சிறந்த ஆடுகளம் அமைப்பது அவசியம்,''என்றார்.



ஸ்ரீகாந்த் மீது பாய்ச்சல்

இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், 'யூ டியூப்' சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,''காம்பிருக்கு விருப்பமானவர் என்பதால் தான் இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது,''என்றார்

இது பற்றி காம்பிர் கூறுகையில்,''உங்கள் 'யூ டியூப்' சேனல் வளர்ச்சிக்காக 23 வயது வீரரை விமர்சிப்பது வெட்கக்கேடானது. இவரை போன்ற இளம் வீரர்களை குறி வைக்காதீர்கள். தனிநபர் விமர்சனம் சரியில்ல. தேவைப்பட்டால் என்னை விமர்சிக்கலாம். என்னால் அதை சமாளிக்க முடியும். ராணாவின் தந்தை ஒன்றும் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் அல்ல. தனது திறமையின் அடிப்படையில் கிரிக்கெட் விளையாடுகிறார்,''என்றார்.

ரோகித், கோலி நிலை

உலக கோப்பை தொடரில் (50 ஓவர், 2027) விளையாட 'சீனியர்' ரோகித் சர்மா, கோலி ஆர்வமாக உள்ளனர். இவர்கள் இடம் பெறுவதை உறுதி செய்ய மறுத்த காம்பிர் கூறுகையில்,''உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. நிகழ்காலம் தான் முக்கியம். இருவரும் தரமான வீரர்கள். இவர்களது அனுபவம் வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கைகொடுக்கும்,''என்றார்.

துருவ் ஜுரல் ராசி

இந்திய கீப்பர்-பேட்டர் துருவ் ஜுரல், 2024ல் ராஜ்கோட் டெஸ்டில் (எதிர், இங்கி.,) அறிமுகமானார். இவர் இடம் பெற்ற டில்லி உட்பட 7 டெஸ்டிலும் இந்தியா வென்றது. இதற்கு முன் புவனேஷ்வர் குமார் தனது முதல் 6 டெஸ்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.






      Dinamalar
      Follow us