ADDED : ஆக 20, 2026 10:52 PM

லீட்ஸ்: லீட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்தின் ஜோ ரூட், ஜோர்டான் காக்ஸ், புரூக் அரைசதம் விளாசினர்.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் லீட்சில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 171 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112/2 ரன் எடுத்திருந்தது. காக்ஸ் (23), கேப்டன் ரூட் (37) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் 4 மணி நேரம் தாமதமாக துவங்கியது. இங்கிலாந்து அணிக்கு ஜோர்டான் காக்ஸ், கேப்டன் ஜோ ரூட் ஜோடி நம்பிக்கை தந்தது. காக்ஸ், டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் விளாசினார். மறுமுனையில் அசத்திய ரூட், அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 150 ரன் சேர்த்த போது காக்ஸ் (73) அவுட்டானார். ரூட், 66 ரன்னில் ஆட்டமிழந்தார். பின் இணைந்த ஹாரி புரூக், டான் லாரன்ஸ் ஜோடி கைகொடுத்தது. புரூக் அரைசதம் கடந்தார்.
தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 307/4 ரன் எடுத்து, 136 ரன் முன்னிலை பெற்றிருந்தது. புரூக் (55), லாரன்ஸ் (49) அவுட்டாகாமல் இருந்தனர்.
