ADDED : ஆக 20, 2026 10:48 PM

சென்னை: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய மதுரை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணியிடம் தோல்வியடைந்தது.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, 'நடப்பு சாம்பியன்' திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி, 'பீல்டிங்' தேர்வு செய்தது.
மதுரை அணிக்கு ராம் குமார் (25) ஆறுதல் தந்தார். சித்தார்த் மகாதேவன் (12), கேப்டன் பாலசந்தர் அனிருத் (1) சோபிக்கவில்லை. மதிவாணன் 'சுழலில்' ஹரி ராகவேந்திரா (14), சோயப் முகமது கான் (10) சிக்கினர். மதுரை அணி 76/7 ரன் எடுத்து தடுமாறியது. பின் இணைந்த அதீக் உர் ரஹ்மான், ரோஹன் புத்ரா ஜோடி ஓரளவு கைகொடுத்தது. எட்டாவது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்த போது, நடராஜன் 'வேகத்தில்' ரோஹன் (36) வெளியேறினார். அதீக் (43) 'ரன்-அவுட்' ஆனார்.
மதுரை அணி 20 ஓவரில் 157/9 ரன் எடுத்தது. திருப்பூர் அணி சார்பில் மதிவாணன் 3, நடராஜன், மோகன் பிரசாத் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
சுலப இலக்கை விரட்டிய திருச்சி அணிக்கு கேப்டன் துஷார் ரஹேஜா (48) நம்பிக்கை தந்தார். குர்ஜப்னீத் சிங் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட பிரதோஷ் ரஞ்சன் பால், 41 பந்தில் அரைசதம் கடந்தார். தீபேஷ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பிரதோஷ், வெற்றியை உறுதி செய்தார்.திருச்சி அணி 17.4 ஓவரில் 160/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிரதோஷ் (65 ரன், 2X6, 8X4), மதிவாணன் (6) அவுட்டாகாமல் இருந்தனர். மதுரை அணி சார்பில் சோயப் முகமது கான் 4 விக்கெட் வீழ்த்தினார்.
நெல்லை அசத்தல்
மற்றொரு லீக் போட்டியில் நெல்லை, சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த சேலம் அணிக்கு ஹரி நிஷாந்த் (36), விவேக் (29), ஈஷ்வர் (31) கைகொடுத்தனர். சேலம் அணி 20 ஓவரில் 140/7 ரன் எடுத்தது. நெல்லை சார்பில் செரியன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
சுலப இலக்கை விரட்டிய நெல்லை அணிக்கு சந்தோஷ் குமார் (50), அதிஷ் (50) நல்ல துவக்கம் தந்தனர். உதய் குமார் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஹரிஷ் வெற்றியை உறுதி செய்தார். நெல்லை அணி 16.1 ஓவரில் 146/5 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹரிஷ் (21), முகிலேஷ் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
