sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

உலக கோப்பை: ரிங்கு விருப்பம்

/

உலக கோப்பை: ரிங்கு விருப்பம்

உலக கோப்பை: ரிங்கு விருப்பம்

உலக கோப்பை: ரிங்கு விருப்பம்


ADDED : மே 27, 2024 10:33 PM

Google News

ADDED : மே 27, 2024 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''ஐ.பி.எல்., போல விரைவில் உலக கோப்பை கையில் ஏந்துவேன்,'' என ரிங்கு சிங் தெரிவித்தார்.

சென்னையில் நடந்த ஐ.பி.எல்., தொடர் பைனலில் கோல்கட்டா அணி, ஐதராபாத்தை சாய்த்து, மூன்றாவது முறையாக கோப்பை வென்றது. இந்த அணியில் இடம் பெற்ற ரிங்கு சிங் 26, களமிறங்கிய 11 இன்னிங்சில் 168 ரன் எடுத்தார்.

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரராக இடம் பெற்றுள்ள ரிங்கு சிங் கூறியது:

கோல்கட்டா அணிக்கு ஆலோசகராக காம்பிர் வந்த பின் நிறைய மாற்றம் ஏற்பட்டது. சுனில் நரைன் துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்தார். மற்ற பேட்டர்களும், பவுலர்களும் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர்.

கடைசி ஐந்து போட்டிகளில் வெங்கடேஷ் சிறப்பான ரன்குவிப்பை வெளிப்படுத்தினார் ஒட்டுமொத்தமாக அனைவரும் சிறப்பாக விளையாடினர்.

அடுத்து நொய்டா செல்லவுள்ளேன். பின் உலக கோப்பை தொடருக்காக அமெரிக்கா செல்ல உள்ளேன். ஐ.பி.எல்., கோப்பை போல, விரைவில் உலக கோப்பை கையில் ஏந்துவதை அனைவரும் பார்ப்பீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us