தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய பெண்கள் அணி சாதிக்குமா

லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய பெண்கள் அணி சாதிக்குமா

லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய பெண்கள் அணி சாதிக்குமா


ADDED : ஜூலை 09, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், இந்திய பெண்கள் அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இப்போட்டி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்குகிறது. இது, லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் முதல் பெண்கள் டெஸ்ட் போட்டி என்ற வரலாறு படைக்கவுள்ளது.

சமீபத்தில் வேல்ஸ், இங்கிலாந்தில் நடந்த 'டி-20' உலக கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய பெண்கள் அணி, இந்த ஆண்டு 2வது டெஸ்டில் விளையாட உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் (மார்ச் 6-8) பங்கேற்றது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

பெர்த் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்ற உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், வைஷ்ணவி சர்மா, காஷ்வீ கவுதம், லார்ட்ஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. முழங்கால் காயத்தால் வெளியேறிய பிரதிகா ராவலுக்கு மாற்றாக பிரியா புனியா தேர்வானார். துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா ஜோடி மீண்டும் துவக்கம் தரலாம். ஹர்லீன் தியோல், ஸ்ரீசரணி, நந்தினி சர்மா அறிமுகமாகலாம்.

இங்கிலாந்து அணியில், இதுவரை டெஸ்டில் விளையாடாத ஆலிஸ் கேப்சி, கோர்ட்டீன்-கோல்மன், மேடி வில்லியர்ஸ், கிரேஸ் பாட்ஸ், எல்லி திரேல்கெல் இடம் பெற்றுள்ளனர். மூன்று வித போட்டியிலும் சதம் விளாசிய டாமி பியூமன்ட், இப்போட்டி யுடன் ஓய்வு பெற உள்ளார். ஆஷஸ் டெஸ்டில் (2023) இரட்டை சதம் (208) விளாசிய இவர், மீண்டும் கைகொடுக்கலாம்.

இதுவரை

பெண்கள் டெஸ்ட் அரங்கில் மோதிய 15 போட்டியில், இந்தியா 3, இங்கிலாந்து ஒன்றில் வென்றன. மீதமுள்ள 11 டெஸ்ட் 'டிரா' ஆனது. கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய 5 டெஸ்டில், இந்தியா 3ல் வென்றது. இரண்டு போட்டி 'டிரா' ஆனது.

* இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி விளையாடிய 9 டெஸ்டில், 2ல் வெற்றி பெற்றது. ஏழு போட்டி 'டிரா' ஆனது.

கேப்டன் நம்பிக்கை

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ''இப்போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் லார்ட்ஸ் டெஸ்டில் கிடைக்கும் வெற்றி, சமீபத்திய 'டி-20' உலக கோப்பையில் லீக் சுற்றோடு திரும்பிய சோகத்தை போக்கும்,'' என்றார்.

இந்திய கேப்டன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us