தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/லக்னோ நாயகன் குயின்டன் * பெங்களூரு அணி ஏமாற்றம்

லக்னோ நாயகன் குயின்டன் * பெங்களூரு அணி ஏமாற்றம்

லக்னோ நாயகன் குயின்டன் * பெங்களூரு அணி ஏமாற்றம்


ADDED : ஏப் 02, 2024 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2024 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூருவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் லக்னோ அணி, 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குயின்டன் டி காக் 81 ரன் விளாசினார்.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 17 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ராகுல் ஏமாற்றம்

லக்னோ அணிக்கு குயின்டன் டி காக், கேப்டன் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. டாப்லே வீசிய முதல் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்து ஸ்கோர் கணக்கைத் துவக்கினார் குயின்டன். தொடர்ந்து சிராஜ் வீசிய மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் அடித்து அசத்தினார். யாஷ் தயாள், மேக்ஸ்வெல் பந்துகளை தன் பங்கிற்கு சிக்சருக்கு அனுப்பினார் ராகுல். இவர் 20 ரன் எடுத்த போது, மேக்ஸ்வெல் சுழலில் சிக்கினார்.

குயின்டன் அரைசதம்

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல்லை, 6 ரன்னில் அவுட்டாக்கினார் சிராஜ். மயங்க் தாகர் பந்தில் பவுண்டரி அடித்த குயின்டன், 36 வது பந்தில் அரைசதம் எட்டினார். ஐ.பி.எல்., அரங்கில் இது, இவரது 22வது அரைசதமாக அமைந்தது. குயின்டன். மெக்ஸ்வெல் பந்தில் சிக்சர் அடித்த ஸ்டாய்னிஸ் (24), அவரிடமே அவுட்டானார்.

சிராஜ் வீசிய போட்டியின் 16வது ஓவரில் குயின்டன், இரு பவுண்டரி அடித்தார். இவர் 56 பந்தில் 81 ரன் எடுத்த போது, டாப்லே பந்தில் அவுட்டானார். ஆயுஸ் பதோனி 'டக்' அவுட்டானார்.

பூரன் 'ஹாட்ரிக்'

டாப்லே போட்டியின் 19 வது ஓவரை வீசினார். இதில் நிகோலஸ் பூரன் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாச, 20 ரன் எடுக்கப்பட்டன. சிராஜ் வீசிய கடைசி ஓவரிலும் மிரட்டிய பூரன், 2 சிக்சர் அடித்தார். லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது. பூரன் (40) அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு சார்பில் மேக்ஸ்வெல் 2, டாப்லே, யாஷ் தயாள், சிராஜ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

விக்கெட் சரிவு

பெங்களூரு அணிக்கு டுபிளசி, கோலி ஜோடி துவக்கம் தந்தது. சித்தார்த் பந்தில் கோலி (22) அவுட்டான பின் அடுத்தடுத்து விக்கெட் சரிந்தது. டுபிளசி (19) ரன் அவுட்டானார். வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ், மேக்ஸ்வெல் (0), கிரீனை (9) வெளியேற்றினார். அனுஜ் ராவத் (11) அவுட்டாக, ரஜத் படிதர் 29 ரன் எடுத்து திரும்பினார்.

தினேஷ் கார்த்திக் (4) நீடிக்கவில்லை. போராடிய லாம்ரர் 33 ரன் எடுத்தார். பெங்களூரு அணி 19.4 ஓவரில் 153 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.

100

பெங்களூருவுக்கு எதிராக 5 சிக்சர் விளாசினார் நிகோலஸ் பூரன். இதையடுத்து ஐ.பி.எல்., அரங்கில் 100 சிக்சர் அடித்த 38வது வீரர் ஆனார். இவர், 62 இன்னிங்சில் இதுவரை 103 சிக்சர் அடித்துள்ளார். முதல் மூன்று இடத்தில் கெய்ல் (357), ரோகித் (261), டிவிலியர்ஸ் (251) உள்ளனர்.

3000

நேற்று 81 ரன் விளாசிய குயின்டன் டி காக், ஐ.பி.எல்., அரங்கில் 3000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர் 99 போட்டியில் 3045 ரன் எடுத்துள்ளார்.

* குறைந்த இன்னிங்சில் இந்த இலக்கை எட்டிய 5வது வீரர் ஆனார் குயின்டன். முதல் நான்கு இடங்களில் கெய்ல் (75 இன்னிங்ஸ்), ராகுல் (80), பட்லர் (85), வார்னர், டுபிளசி (94) உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us