தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/லக்னோ அணி ஆறுதல் வெற்றி: மும்பை அணியை வீழ்த்தியது

லக்னோ அணி ஆறுதல் வெற்றி: மும்பை அணியை வீழ்த்தியது

லக்னோ அணி ஆறுதல் வெற்றி: மும்பை அணியை வீழ்த்தியது


ADDED : மே 18, 2024 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2024 12:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: பேட்டிங், பவுலிங்கில் அசத்திய லக்னோ அணி 18 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை, லக்னோ அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

பூரன் விளாசல்

லக்னோ அணிக்கு தேவ்தத் படிக்கல் (0) ஏமாற்றினார். ஸ்டாய்னிஸ் (28) ஆறுதல் தந்தார். தீபக் ஹூடா (11) நிலைக்கவில்லை. பின் இணைந்த கேப்டன் ராகுல், பூரன் ஜோடி நம்பிக்கை தந்தது. அன்ஷுல், ஹர்திக், அர்ஜுன் ஓவரில் தலா 2 சிக்சர் பறக்கவிட்ட பூரன், 19 பந்தில் அரைசதம் விளாசினார். ஷெப்பர்ட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ராகுல், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்த போது துசாரா பந்தில் பூரன் (75 ரன், 8 சிக்சர், 5 பவுண்டரி) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ராகுல் (55), சாவ்லா 'சுழலில்' சிக்கினார்.

லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 214 ரன் எடுத்தது. குர்னால் (12), படோனி (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரோகித் அரைசதம்

சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணி 3.5 ஓவரில் 33/0 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மொசின் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா 28 பந்தில் அரைசதம் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்த போது நவீன் பந்தில் பிரேவிஸ் (23) அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் (0) ஏமாற்றினார். பிஷ்னோய் 'சுழலில்' ரோகித் (68) சிக்கினார். ஹர்திக் பாண்ட்யா (16), நேஹல் வதேரா (1) சோபிக்கவில்லை.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 34 ரன் தேவைப்பட்டன. நவீன் பந்துவீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய நமன் திர், 25 பந்தில் அரைசதம் கடந்தார். மூன்றாவது பந்தில் இஷான் கிஷான் (14) போல்டானார். கடைசி பந்தை நமன் திர் சிக்சருக்கு அனுப்பிய போதும் வெற்றிக்கு உதவவில்லை. மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்து தோல்வியடைந்தது. நமன் திர் (62), ஷெப்பர்ட் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

அதிவேக அரைசதம்

அதிவேக அரைசதம் விளாசிய லக்னோ அணி வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் பூரன் (19 பந்து). முதலிடத்திலும் பூரன் (15 பந்து, எதிர்: பெங்களூரு, 2023) தான் உள்ளார்.

* ஐ.பி.எல்., அரங்கில் 20 அல்லது அதற்கு குறைவான பந்தில், மூன்று முறை அரைசதம் விளாசிய 3வது வீரரானார் பூரன். ஏற்கனவே பிரேசர்-மெக்குர்க், டிராவிஸ் ஹெட் இப்படி ரன் குவித்தனர்.

அர்ஜுன் காயம்

ஆட்டத்தின் 15வது ஓவரை வீசிய அர்ஜுன், இரண்டு பந்து மட்டும் வீசிய நிலையில் காலில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறினார். மீதமுள்ள பந்துகளை நமன் திர் வீசினார். 2.2 ஓவர் வீசிய அர்ஜுன், 22/0 ரன் விட்டுக்கொடுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us