தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பைனலில் மதுரை அணி: மழையால் போட்டி ரத்து

பைனலில் மதுரை அணி: மழையால் போட்டி ரத்து

பைனலில் மதுரை அணி: மழையால் போட்டி ரத்து


UPDATED : ஆக 23, 2026 11:53 PM

ADDED : ஆக 23, 2026 11:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 11:53 PM ADDED : ஆக 23, 2026 11:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: டி.என்.பி.எல்., தகுதிச் சுற்று-1 மழையால் பாதியில் ரத்தானதால், மதுரை அணி பைனலுக்கு தகுதி பெற்றது.

டி.என்.பி.எல்., லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த மதுரை (10 புள்ளி), திருச்சி (10), கோவை (8), திருப்பூர் (8) அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தகுதிச் சுற்று-1ல், மதுரை, திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மதுரை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. திருச்சி அணி 25/1 (2.5 ஓவர்), 49/1 (4.5 ஓவர்) ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. ராஜ்குமார் (20), ஷியாம் சுந்தர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த மதுரை அணி பைனலுக்குள் (ஏப். 28) நுழைந்தது. திருச்சி அணி, தகுதிச் சுற்று-2 போட்டிக்கு (ஆக. 26) தகுதி பெற்றது. இதில், இன்று நடக்கவுள்ள 'எலிமினேட்டர்' போட்டியில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us