தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/மதுரை, சேலம் அணிகள் ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்

மதுரை, சேலம் அணிகள் ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்

மதுரை, சேலம் அணிகள் ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்


UPDATED : ஜூன் 29, 2025 12:41 AM

ADDED : ஜூன் 28, 2025 10:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2025 12:41 AM ADDED : ஜூன் 28, 2025 10:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய மதுரை, சேலம் அணிகள் தோல்வியடைந்தன.

திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, சேப்பாக்கம் அணிகள் மோதின. இதில் சேப்பாக்கம் அணி ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மதுரை அணி களமிறங்கியது. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி கேப்டன் பாபா அபராஜித் 'பவுலிங்' தேர்வு செய்தார். மழையால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

மதுரை அணிக்கு கேப்டன் சதுர்வேத், அதீக் உர் ரஹ்மான் ஜோடி நம்பிக்கை தந்தது. சதுர்வேத் (31) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய அதீக் (41), முருகன் அஷ்வின் (38), சரவணன் (20) கைகொடுத்தனர்.

மதுரை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்தது. குர்ஜப்னீத் சிங் (15), கார்த்திக் மெய்யப்பன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஈசல் தொல்லை: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணிக்கு ஆஷிக் (22), மோகித் ஹரிகரன் (17), கேப்டன் பாபா அபராஜித் (20) கைகொடுத்தனர். சேப்பாக்கம் அணி 9.2 ஓவரில் 71/3 ரன் எடுத்திருந்த போது, ஈசல் தொல்லையால் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின், 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 14 ஓவரில், 114 ரன் என இலக்கு மாற்றப்பட்டது.28 பந்தில், 43 ரன் தேவைப்பட்ட நிலையில் விஜய் சங்கர் (28*), நாராயணன் ஜெகதீசன் (18) ஜோடி கைகொடுத்தது. சேப்பாக்கம் அணி 12.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 114 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

கோவை வெற்றி

மற்றொரு லீக் போட்டியில் கோவை, சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேலம் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது. பாலசுப்ரமணியம் சச்சின் (116 ரன், 6 சிக்சர்), கேப்டன் ஷாருக்கான் (45 ரன், 7 சிக்சர்) கைகொடுக்க, கோவை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 203 ரன் எடுத்தது.

கடின இலக்கை விரட்டிய சேலம் அணிக்கு கேப்டன் அபிஷேக் (32), ஈஸ்வர் (29) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற சேலம் அணி 19.1 ஓவரில் 135 ரன்னுக்கு சுருண்டு, 68 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கோவையின் வித்யுத் 5 விக்கெட் சாய்த்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us