மானவ் சுதார் 7 விக்கெட்: 'கவுன்டி' போட்டியில் கலக்கல்
மானவ் சுதார் 7 விக்கெட்: 'கவுன்டி' போட்டியில் கலக்கல்
ADDED : செப் 05, 2026 08:54 PM

சவுத்தாம்ப்டன்: 'கவுன்டி' போட்டியில் மானவ் சுதார், 7 விக்கெட் கைப்பற்றினார்.
இங்கிலாந்தில், 'கவுன்டி' சாம்பியன்ஷிப் 'டிவிசன்-1' தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நடந்த போட்டியில் வார்விக் ஷயர் அணி (398/10), இன்னிங்ஸ், 129 ரன் வித்தியாசத்தில் ஹாம்ப்ஷயர் அணியை (115/10, 'பாலோ-ஆன்' 154/10) வீழ்த்தியது.
இதில் வார்விக் ஷயர் அணி சார்பில் பங்கேற்ற இந்திய சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதார், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட் (3/42, 4/52) வீழ்த்தினார். மானவ் சுதார், இத்தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டியில், 18 விக்கெட் சாய்த்துள்ளார்.
சகால் ஏமாற்றம்: நார்த்தாம்ப்டனில் நடந்த 'கவுன்டி' சாம்பியன்ஷிப் 'டிவிசன்-2' போட்டியில் துர்ஹாம் அணி (205/10, 261/10), 153 ரன் வித்தியாசத்தில் நார்த்தாம்ப்டன்ஷயர் அணியை (263/10, 50/10) வென்றது.
இப்போட்டியில் 'சுழலில்' அசத்திய நார்த்தாம்ப்டன்ஷயர் அணியின் இந்திய வீரர் யுவேந்திர சகால், இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் (4/36, 5/84) கைப்பற்றினார். ஆனால் நார்த்தாம்டன்ஷயர் அணி தோல்வியடைந்தது சகாலுக்கு ஏமாற்றமானது.
