தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தெற்கு-கிழக்கு மண்டலம் மோதல்: துலீப் டிராபி பைனலில்

தெற்கு-கிழக்கு மண்டலம் மோதல்: துலீப் டிராபி பைனலில்

தெற்கு-கிழக்கு மண்டலம் மோதல்: துலீப் டிராபி பைனலில்


ADDED : செப் 05, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 09:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: துலீப் டிராபி பைனலில் தெற்கு, கிழக்கு மண்டல அணிகள் மோதுகின்றன.

துலீப் டிராபி கிரிக்கெட் 63வது சீசன் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள (செப். 6-10) பைனலில் (5 நாள் போட்டி), திலக் வர்மா தலைமையிலான தெற்கு மண்டல அணி, இஷான் கிஷான் வழிநடத்தும் கிழக்கு மண்டல அணியை சந்திக்கிறது.

வைபவ் நம்பிக்கை: கிழக்கு மண்டல அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் (108 ரன், 2 போட்டி ), வைபவ் சூர்யவன்ஷி (140 ரன், 2 போட்டி) நல்ல துவக்கம் தரலாம். இவர்களுக்கு, சுதிப் குமார் (185 ரன், 2 போட்டி), ஷாபாஸ் அகமது (167, ஒரு போட்டி) கைகொடுத்தால் வலுவான ஸ்கோரை பெறலாம். கேப்டன் இஷான் கிஷான் (59 ரன், 2 போட்டி) எழுச்சி காண வேண்டும். பவுலிங்கில் அபிஜித் சர்கார் (10 விக்கெட்), முகேஷ் குமார் (9), அனுகுல் ராய் (7), முகமது (7) கைகொடுத்தால், கோப்பை வெல்லலாம்.

திலக் அபாரம்: தெற்கு மண்டல அணிக்கு கேப்டன் திலக் வர்மா (167 ரன், 2 போட்டி) பலம் சேர்க்கிறார். சமீபத்திய இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 சதம் விளாசிய தேவ்தத் படிக்கல், தெற்கு மண்டல அணிக்காக இன்று களமிறங்கினால் நல்லது. ஷ்ரேயஸ் கோபால், நாராயண் ஜெகதீசன் கைகொடுக்கலாம். பவுலிங்கில் நிதீஷ் (7 விக்கெட்) மிரட்டலாம். சிராஜ் விளையாடினால், அணியின் பலம் அதிகரிக்கும்.

ஷமி '100'

கிழக்கு மண்டல அணியில் இடம் பெற்றுள்ள முகமது ஷமி, தனது 100வது முதல்தர போட்டியில் களமிறங்க உள்ளார். இதுவரை 99 முதல்தர போட்டியில் 382 விக்கெட் சாய்த்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us