
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராவல்பிண்டி: பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் வென்றது. ராவல்பிண்டியில் இரண்டாவது டெஸ்ட் துவங்க இருந்தது. ஆனால் தொடர்ச்சியான மழை, மைதான ஈரப்பதம் காரணமாக 'டாஸ்' கூட போடாத நிலையில் முதல் நாள் ஆட்டம் ரத்தானது.
இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதி நீக்கப்பட்டார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் மிர் ஹம்சா, 'சுழல்' வீரர் அப்ரார் அகமது தேர்வாகினர்.

