/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மழையால் போட்டி ரத்து: சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்
/
மழையால் போட்டி ரத்து: சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 08, 2024 12:07 AM

சென்னை: இந்தியா, தென் ஆப்ரிக்க பெண்கள் அணிகள் மோதிய 2வது 'டி-20' போட்டி மழையால் பாதியில் ரத்தானது. சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. நேற்று, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
மழையால் போட்டி 15 நிமிடம் தாமதமாக துவங்கியது.கேப்டன்லாராவோல்வார்ட்(22)நல்ல துவக்கம் கொடுத்தார்.ராதா யாதவ் பந்தில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த மரிசான் காப் (20), தீப்தி சர்மா 'சுழலில்' சிக்கினார். ராதா பந்தை சிக்சருக்கு அனுப்பிய பிரிட்ஸ், 36 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய தீப்தி பந்தில் பிரிட்ஸ் (52) அவுட்டானார். அன்னேக் போஷ் (40) ஓரளவு கைகொடுத்தார். நாடின் டி கிளார்க் (14) சோபிக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. டெர்க்சன் (12), எலிஸ்-மாரி மார்க்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் பூஜா, தீப்தி சர்மா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
பின் மழை குறுக்கிட்டதால் போட்டியை பாதியில் ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். இரண்டு போட்டிகளின் முடிவில் தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி ஜூலை 9ல் சென்னையில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும்.