sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஒருநாள் போட்டிக்கு மேக்ஸ்வெல் 'குட்பை'

/

ஒருநாள் போட்டிக்கு மேக்ஸ்வெல் 'குட்பை'

ஒருநாள் போட்டிக்கு மேக்ஸ்வெல் 'குட்பை'

ஒருநாள் போட்டிக்கு மேக்ஸ்வெல் 'குட்பை'


ADDED : ஜூன் 02, 2025 10:49 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்போர்ன்: ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் ஓய்வு பெற்றார்.

ஆஸ்திரேலிய 'ஆல்-ரவுண்டர்' மேக்ஸ்வெல் 36. கடந்த 2012ல் ஒருநாள் (ஆக. 25, எதிர்: ஆப்கன்), 'டி-20'ல் (செப். 5, எதிர்: பாக்.,) அறிமுகமானார். பின், 2013ல் ஐதராபாத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் முதன்முறையாக பங்கேற்றார். இரண்டு முறை (2015, 2023) 50 ஓவர், ஒரு முறை (2021) 'டி-20' உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார்.கடந்த 2023 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 91/7 ரன் எடுத்து திணறியது. அப்போது களமிறங்கிய மேக்ஸ்வெல், 128 பந்தில் 201 ரன் குவித்து அணியை மீட்டார்.

இதுவரை 7 டெஸ்ட் (339 ரன், ஒரு சதம், 8 விக்கெட்), 149 ஒருநாள் (3990 ரன், 4 சதம், சராசரி 33.81, 'ஸ்டிரைக் ரேட்' 126.70, 77 விக்கெட்), 116 சர்வதேச 'டி-20'ல் (2664 ரன், 5 சதம், சராசரி 29.93, 'ஸ்டிரைக் ரேட்' 154.97, 43 விக்கெட்) விளையாடி உள்ளார்.

அடுத்த ஆண்டு இந்தியா, இலங்கையில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பைக்கு தயாராக, ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மேக்ஸ்வெல் அறிவித்தார். சமீபத்தில் (மார்ச் 4) துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் (எதிர்: இந்தியா) விளையாடியது இவரது கடைசி ஒருநாள் போட்டியாகும். இனி, 'டி-20' போட்டிகளில் மட்டும் விளையாடப் போவதாக மேக்ஸ்வெல் தெரிவித்தார்.

இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில், ''ஒருநாள் போட்டிக்கான அணியில் எனது இடத்தை சிறந்த வீரரை கொண்டு நிரப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது,'' என்றார்.






      Dinamalar
      Follow us