ADDED : ஜன 31, 2024 09:52 PM

அகர்தலா: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மயங்க் அகர்வால் தேறி வருகிறார்.
இந்திய அணி துவக்க வீரர் மயங்க் அகர்வால் 33. இவர் 21 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளார். ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடக அணி கேப்டனாக உள்ளார். கடந்த 4 போட்டியில் இரு சதம் விளாசினார். திரிபுராவில் நடந்த போட்டியில் வென்ற கர்நாடக அணி, அடுத்து ரயில்வேஸ் அணிக்கு எதிராக இன்று களமிறங்குகிறது.
இதற்காக அகர்தலாவில் இருந்து விமானத்தில் சூரத் கிளம்பியது கர்நாடக அணி. அப்போது தண்ணீர் என நினைத்து ஏதோ குடித்துள்ளார்.
உடனடியாக வாந்தி எடுத்த அகர்வால், வாய், தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டது. இத்துடன் வயிற்று வலியும் சேர்ந்து கொள்ள, விமானம் மீண்டும் அகர்தலா திரும்பியது.
இங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தற்போது நலமாக உள்ளார். அவர் கூறுகையில்,''தற்போது நான் நலமாக உள்ளேன். விரைவில் மீண்டு வர முயற்சிப்பேன். குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.