/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்: 'பிக் பாஷ் லீக்' தொடரில்
/
கோப்பை வென்றது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்: 'பிக் பாஷ் லீக்' தொடரில்
கோப்பை வென்றது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்: 'பிக் பாஷ் லீக்' தொடரில்
கோப்பை வென்றது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்: 'பிக் பாஷ் லீக்' தொடரில்
ADDED : டிச 01, 2024 09:41 PM

மெல்போர்ன்: பெண்கள் 'பிக் பாஷ் லீக்' தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி கோப்பை வென்றது. பைனலில், 7 ரன் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான 'பிக் பாஷ் லீக்' கிரிக்கெட் ('டி-20') 10வது சீசன் நடந்தது. மெல்போர்னில் நடந்த பைனலில் பிரிஸ்பேன் ஹீட், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பிரிஸ்பேன் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஹேலி மாத்யூஸ் (69), ஜார்ஜியா வேர்ஹாம் (21) கைகொடுக்க மெல்போர்ன் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 141 ரன் எடுத்தது. பிரிஸ்பேன் அணி சார்பில் சார்லி நாட் 3, கிரேஸ் பார்சன்ஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய பிரிஸ்பேன் அணி 3.2 ஓவரில் 19/2 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. பின், 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் பிரிஸ்பேன் அணியின் வெற்றிக்கு 12 ஓவரில், 98 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. ஜெஸ் ஜோனாசன் (44*) ஆறுதல் தர, பிரிஸ்பேன் அணி 12 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 90 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.