/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய அணி ஏமாற்றம் * ஜெய்ஸ்வால் போராட்டம் வீண்
/
இந்திய அணி ஏமாற்றம் * ஜெய்ஸ்வால் போராட்டம் வீண்
UPDATED : டிச 30, 2024 03:26 PM
ADDED : டிச 29, 2024 10:38 PM

மெல்போர்ன்: மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி 184 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜெய்ஸ்வால் 84 ரன் எடுத்து ஆறுதல் தந்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது.
நான்காவது டெஸ்ட் (பாக்சிங் டே) மெல்போர்னில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 474, இந்தியா 369 ரன் எடுத்தன. நான்காவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 228 ரன் எடுத்து, 333 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
இன்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. லியான் (41) பும்ரா பந்தில் போல்டானார். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 234 ரன் எடுத்தது. பும்ரா 5 விக்கெட் சாய்த்தார்.
கடின இலக்கு
அடுத்து 340 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இந்தியா. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (9) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. ராகுல் 'டக்' அவுட்டாக, கோலி (5) ஏமாற்றினார். ரிஷாப் (30) ஆறுதல் தந்தார். அடுத்து வந்த வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. ஜெய்ஸ்வால் மட்டும் அதிகபட்சம் 84 ரன் எடுத்து அவுட்டானார்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 155 ரன்னுக்கு சுருண்டது. தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியது.