தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்: பெண்கள் பிரிமியர் லீக் அட்டவணை வெளியீடு

மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்: பெண்கள் பிரிமியர் லீக் அட்டவணை வெளியீடு

மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்: பெண்கள் பிரிமியர் லீக் அட்டவணை வெளியீடு


ADDED : நவ 29, 2025 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 10:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: பெண்கள் பிரிமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை, பெங்களூரு அணிகள் (ஜன. 9) மோதுகின்றன.

இந்தியாவில், பெண்கள் பிரிமியர் லீக் ('டி-20') 4வது சீசன் அடுத்த ஆண்டு (ஜன. 9 - பிப். 5) நடக்கவுள்ளது. இதில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, பெங்களூரு, டில்லி, குஜராத், உ.பி., என 5 அணிகள் பங்கேற்கின்றன. சமீபத்தில், இதற்கான வீராங்கனைகள் 'மெகா' ஏலம் டில்லியில் நடந்தது.

இத்தொடருக்கான அட்டவணை வெளியானது. இதன்படி, 28 நாளில், 22 போட்டிகள், இரண்டு இடங்களில் நடக்கவுள்ளன. முதல் 11 போட்டிகள், நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடக்கும். எலிமினேட்டர் (பிப். 2), பைனல் (பிப். 5) உட்பட மீதமுள்ள 11 போட்டிகள், வதோதராவில் உள்ள கோடம்பி மைதானத்தில் நடத்தப்படும். ஜன. 10, 17ல் (ஞாயிறு) மட்டும் தலா 2 போட்டிகள் நடக்கும்.

வரும் ஜன. 9ல் நவி மும்பையில் நடக்கவுள்ள முதல் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை அணி, பெங்களூருவை எதிர்கொள்கிறது.

அடுத்த ஆண்டு (பிப். 7 - மார்ச் 8) இந்தியா, இலங்கையில், 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்க இருப்பதால், பெண்கள் பிரிமியர் லீக் தொடர் முன்கூட்டியே நடத்தப்படுகிறது.

பைனலுக்கு எப்படி

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 போட்டியில் ('டபுள் ரவுண்டு-ராபின்') விளையாடும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும். அடுத்த இரு இடம் (2-3வது) பிடிக்கும் அணிகள் 'எலிமினேட்டர்' போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு தகுதி பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us