/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பைனல் கனவில் மும்பை அணி: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை
/
பைனல் கனவில் மும்பை அணி: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை
பைனல் கனவில் மும்பை அணி: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை
பைனல் கனவில் மும்பை அணி: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை
ADDED : மே 31, 2025 09:46 PM

ஆமதாபாத்: பிரிமியர் லீக் தொடரின் பைனலுக்கு முதல் அணியாக பெங்களூரு முன்னேறியது. இன்று, ஆமதாபாத்தில் நடக்கும் தகுதிச் சுற்று-2ல் பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி பைனலுக்கு முன்னேறும். தோற்கும் அணி வெளியேறும்
பஞ்சாப் அணி, தகுதிச் சுற்று-1ல் பெங்களூருவிடம் தோற்றது. இப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது. இன்று பிரப்சிம்ரன் சிங் (517 ரன்), கேப்டன் ஷ்ரேயஸ் (516), பிரியான்ஷ் ஆர்யா (431) கைகொடுத்தால் நல்லது. பின் வரிசையில் வதேரா (306), ஷசாங்க் சிங் (287) அதிரடி காட்டினால் நல்ல ஸ்கோரை பெறலாம்.
வேகப்பந்துவீச்சில் யான்சென் இல்லாதது பின்னடைவு. இதனால் அர்ஷ்தீப் சிங்கிற்கு கூடுதல் சுமை. காயத்தால் சகால் (14) அவதிப்படுவது பலவீனம். சுழற்பந்துவீச்சில் ஹர்பிரீத் பிரார் (10) ஆறுதல் தருகிறார். இன்று பஞ்சாப் அணி அசத்தினால் 2வது முறையாக பைனலுக்குள் நுழையலாம்.
ரோகித் நம்பிக்கை: மும்பை அணி, 'எலிமினேட்டர்' போட்டியில் குஜராத் அணியை 20 ரன்னில் வீழ்த்தியது. ரோகித் சர்மா (410 ரன்), ரன் மழை பொழியலாம். பேர்ஸ்டோவ் விளாசினால், நல்ல துவக்கம் கிடைக்கும். சூர்யகுமார் யாதவ் (673 ரன்), திலக் வர்மா (299), நமன் திர் (215), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (209) என நீண்ட பேட்டிங் வரிசை இருப்பது பலம்.
வேகப்பந்துவீச்சில் பும்ரா (18 விக்கெட்), பவுல்ட் (21) கூட்டணி மிரட்டலாம். 'சுழலில்' சான்ட்னர் (10) கைகொடுக்கிறார். இன்று மும்பை வென்றால், 7வது முறையாக பைனலுக்கு முன்னேறலாம்.
மழை வருமா
ஆமதாபாத்தில் இன்று வானம் தெளிவாக இருக்கும். மழைக்கு வாய்ப்பில்லை.
* ஆமதாபாத் மோடி மைதான ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.