/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மும்பை அணி திணறல்: சூர்யகுமார் ஏமாற்றம்
/
மும்பை அணி திணறல்: சூர்யகுமார் ஏமாற்றம்
ADDED : ஆக 28, 2024 11:05 PM

கோவை: புச்சி பாபு கிரிக்கெட்டில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 141/8 ரன் எடுத்திருந்தது. சூர்யகுமார் 30 ரன்னில் அவுட்டாகி, ஏமாற்றினார்.
தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கோவையில் நடக்கும் 'சி' பிரிவு லீக் போட்டியின் முதல் நாள் முடிவில் டி.என்.சி.ஏ., லெவன் அணி 294/5 ரன் எடுத்திருந்தது. நேற்றைய 2ம் நாள் ஆட்டத்தில் பூபதி குமார் (82), அஜித் ராம் (53) கைகொடுக்க முதல் இன்னிங்சில் டி.என்.சி.ஏ., லெவன் அணி 379/10 ரன் எடுத்தது.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய மும்பை அணி, ஆட்டநேர முடிவில் 141/8 ரன் எடுத்திருந்தது. சூர்யகுமார் யாதவ் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். திவ்யான்ஷ் சக்சேனா (61*) அவுட்டாகாமல் இருந்தார். டி.என்.சி.ஏ., சார்பில் சாய் கிஷோர், லக்சய் ஜெய்ன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
குஜராத் அசத்தல்: சேலத்தில் நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் குஜராத் அணி 371 ரன் எடுத்தது. முகமது அலி (56), ஆன்ட்ரி சித்தார்த் (55*) ஆறுதல் தர, டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன் அணி முதல் இன்னிங்சில் 211 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. குஜராத் அணியின் சித்தார்த் தேசாய் 6 விக்கெட் சாய்த்தார்.
ஐதராபாத் அபாரம்: திருநெல்வேலியில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியின் முதல் இன்னிங்சில் மத்திய பிரதேசம் அணி 207 ரன் எடுத்தது. அபிராத் (211) இரட்டை சதம் விளாச 2ம் நாள் முடிவில் ஐதராபாத் அணி, முதல் இன்னிங்சில் 439/5 ரன் எடுத்திருந்தது.
சத்தீஸ்கர் பதிலடி: திண்டுக்கல், நத்தத்தில் நடக்கும் 'டி' பிரிவு லீக் போட்டியில் நினத் ரத்வா (105) சதம் கடந்து கைகொடுக்க பரோடா அணி முதல் இன்னிங்சில் 327 ரன் எடுத்தது. ஆட்டநேர முடிவில் சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 214/2 ரன் எடுத்திருந்தது. அனுஜ் திவாரி (84), அமன்தீப் (63) அவுட்டாகாமல் இருந்தனர்.