தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/மும்பை டெஸ்ட்: இந்தியா அபாரம்

மும்பை டெஸ்ட்: இந்தியா அபாரம்

மும்பை டெஸ்ட்: இந்தியா அபாரம்


UPDATED : நவ 02, 2024 05:09 PM

ADDED : நவ 01, 2024 11:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2024 05:09 PM ADDED : நவ 01, 2024 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: சுப்மன் கில், ரிஷாப் பன்ட் கைகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 263 ரன் எடுத்தது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் நியூசிலாந்து வென்றது. மூன்றாவது, கடைசி டெஸ்ட் மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 86/4 ரன் எடுத்திருந்தது. கில் (31), பன்ட் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் சுப்மன் கில் (90), ரிஷாப் பன்ட் (60) கைகொடுத்தனர். ஜடேஜா (14), சர்பராஸ் கான் (0), அஷ்வின் (6) சோபிக்கவில்லை. இந்திய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வாஷிங்டன் சுந்தர் (38) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 5 விக்கெட் சாய்த்தார்.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லதாம் (1), ரச்சின் ரவிந்திரா (4) ஏமாற்றினர். கான்வே (22), டேரில் மிட்செல் (21) ஓரளவு கைகொடுத்தனர். ஜடேஜா 'சுழலில்' டாம் பிளன்டெல் (4), இஷ் சோதி (8), மாட் ஹென்றி (10) சிக்கினர். பிலிப்ஸ் (26) ஓரளவு கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய வில் யங் (51) அரைசதம் கடந்தார்.

ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்து, 143 ரன் முன்னிலையில் இருந்தது. அஜாஸ் படேல் (7) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ஜடேஜா 4, அஷ்வின் 3 விக்கெட் சாய்த்தனர்.

314 விக்கெட்

முதல் இன்னிங்சில் அசத்திய ஜடேஜா, டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்களில் ஐந்தாவது இடம் பிடித்தார். 'டாப்-7' வீரர்கள்.

வீரர் போட்டி விக்.,

கும்ளே 132 619

அஷ்வின் 105 533

கபில்தேவ் 131 434

ஹர்பஜன் 103 417

ஜடேஜா 77 314

இஷாந்த் 105 311

ஜாகிர் கான் 92 311

14 முறை

நேற்று சுழலில் மிரட்டிய ஜடேஜா, அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய 6வது இந்திய பவுலரானார். பிஷன் சிங் பேடி (14 முறை) சாதனையை சமன் செய்தார். முதல் ஐந்து இடங்களில் அஷ்வின் (37), கும்ளே (35), ஹர்பஜன் (25), கபில்தேவ் (23), சந்திரசேகர் (16) உள்ளனர்.

அம்பயர்கள் எச்சரிக்கை

நியூசிலாந்து அணி வீரர் மிட்செல் பேட்டிங் செய்த போது, அருகில் நின்று பீல்டிங் செய்தார் இந்தியாவின் சர்பராஸ் கான். அவ்வப்போது மிட்செலை கேலி செய்யும் வகையில் ஏதோ பேசினார். இவருடன் விக்கெட் கீப்பர் ரிஷாப்பும் இணைந்து கொண்டார்.

மிட்செல் பேட்டிங் செய்த போதும், சர்பராஸ் பேசுவதை நிறுத்தவில்லை. இதுகுறித்து மிட்செல் அம்பயரிடம் புகார் தெரிவித்தார் இதையடுத்து சர்பராஸ், கேப்டன் ரோகித்தை அழைத்து அம்பயர்கள் எச்சரிக்கை செய்தனர். பின் சமாதானமாகி பேட்டிங்கை தொடர்ந்தார் மிட்செல்.

6 ரன், 3 விக்.,

இந்திய அணி ஒரு கட்டத்தில் 78/1 என இருந்தது. அடுத்த 9 பந்தில் 6 ரன் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுக்க, 84/4 என திணறியது.

600 இன்னிங்ஸ்

இந்தியாவின் கோலி, டெஸ்டில் நேற்று தனது 200 வது இன்னிங்சில் (118 டெஸ்ட்) விளையாடினார். சச்சின் (329), டிராவிட் (286), லட்சுமண் (225), கவாஸ்கருக்கு (214) அடுத்து இம்மைல்கல்லை எட்டிய 5வது இந்தியர் ஆனார்.

* ஏற்கனவே ஒருநாள் அரங்கில் 283 (295ல்), சர்வதேச 'டி-20' ல் 117 (125ல்) என ஒட்டுமொத்தமாக, சர்வதேச கிரிக்கெட்டில், 600வது இன்னிங்சாக அமைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us