sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

மும்பை டெஸ்டில் வீழ்ந்தது இந்தியா: கோப்பை வென்றது நியூசிலாந்து

/

மும்பை டெஸ்டில் வீழ்ந்தது இந்தியா: கோப்பை வென்றது நியூசிலாந்து

மும்பை டெஸ்டில் வீழ்ந்தது இந்தியா: கோப்பை வென்றது நியூசிலாந்து

மும்பை டெஸ்டில் வீழ்ந்தது இந்தியா: கோப்பை வென்றது நியூசிலாந்து

2


UPDATED : நவ 03, 2024 11:13 PM

ADDED : நவ 02, 2024 10:56 PM

Google News

UPDATED : நவ 03, 2024 11:13 PM ADDED : நவ 02, 2024 10:56 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி 25 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற நியூசிலாந்து, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 235, இந்தியா 263 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 171/9 ரன் எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரவிந்திர ஜடேஜா 'சுழலில்' அஜாஸ் படேல் (8) சிக்கினார். நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 174 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ரூர்கே (2) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ஜடேஜா 5, அஷ்வின் 3 விக்கெட் சாய்த்தனர்.

பின் 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (5), கேப்டன் ரோகித் (11), சுப்மன் கில் (1), விராத் கோலி (1) ஏமாற்றினர். ரிஷாப் பன்ட் (64) அரைசதம் கடந்தார். சர்பராஸ் கான் (1), ஜடேஜா (6), அஷ்வின் (8), வாஷிங்டன் சுந்தர் (12) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

இந்திய அணி 2வது இன்னிங்சில் 121 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 6, பிலிப்ஸ் 3 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை அஜாஸ் படேல் வென்றார். தொடர் நாயகன் விருதை வில் யங் (244 ரன்) கைப்பற்றினார்.



பைனல் வாய்ப்பு எப்படி

நியூசிலாந்துக்கு எதிராக தொடரை இழந்த இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-2025) புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு பின்தங்கியது. 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலிய அணி 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணி 5வது இடத்தில் இருந்து 4வது இடத்தை கைப்பற்றியது.

புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், அடுத்த ஆண்டு (ஜூன் 11-15) லண்டன், லார்ட்சில் நடக்கும் பைனலில் விளையாடும். தற்போதுள்ள நிலையில் ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் 'டாப்-2' இடத்தில் உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததால், இந்திய அணியின் பைனல் வாய்ப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அடுத்து ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. இதில் 4ல் வெற்றி பெற்றாமல் மட்டுமே 'டாப்-2' வரிசையில் இடத்தை தக்கவைத்து, தொடர்ந்து 3வது முறையாக பைனலுக்குள் நுழைய முடியும். ஒருவேளை 2--3 அல்லது மோசமான தோல்வியை சந்தித்தால், மற்ற அணிகள் பங்கேற்கும் போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதேபோல ஆஸ்திரேலிய அணி பைனலுக்கு தகுதி பெற, அடுத்து பங்கேற்கும் 7 டெஸ்டில், 4ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

'ஒயிட்வாஷ்'

இந்திய அணி, சொந்த மண்ணில் முதன்முறையாக மூன்று அல்லது அதற்கு மேல் போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கோட்டைவிட்டது. தவிர இது, சொந்த மண்ணில் இந்திய அணியின் மூன்றாவது 'ஒயிட்வாஷ்'. ஏற்கனவே தென் ஆப்ரிக்கா (0-2, 2000), இங்கிலாந்து (0-1, 1980) அணிகளுக்கு எதிராக தொடரை முழுமையாக பறிகொடுத்திருந்தது.

* 41 ஆண்டுகளுக்கு பின், சொந்த மண்ணில் பங்கேற்ற ஒரு டெஸ்ட் தொடரில், 3 போட்டியில் தோல்வியை சந்தித்தது இந்தியா. கடைசியாக 1983ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 'டிரா', 3 தோல்வியை பெற்றது இந்தியா.

* இந்திய அணி, 4வது முறையாக சொந்த மண்ணில் பங்கேற்ற டெஸ்டில் 'ஹாட்ரிக்' தோல்வியை பதிவு செய்தது. கடைசியாக 1976-77ல் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 3 டெஸ்டில் தோல்வியடைந்திருந்தது.

* இந்திய அணி, 2வது முறையாக சொந்த மண்ணில் ஒரு ஆண்டில் 4 டெஸ்டில் தோல்வியடைந்தது. இந்த ஆண்டு விளையாடிய 10 டெஸ்டில், 6 வெற்றி, 4 தோல்வியை பெற்றது. ஏற்கனவே 1969ல் பங்கேற்ற 8 டெஸ்டில், 2 வெற்றி, 4 தோல்வியை பதிவு செய்திருந்தது.

இரண்டாவது கேப்டன்

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் தோல்வியை சந்தித்த இந்திய கேப்டன் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் ரோகித். இவரது தலைமையில் 16 டெஸ்டில், 10 வெற்றி, ஒரு 'டிரா', 5 தோல்வியை பெற்றது. முதலிடத்தில் பட்டோடி (27 டெஸ்ட், 6 வெற்றி, 12 'டிரா', 9 தோல்வி) உள்ளார்.

147 ரன்

இந்திய அணி (147 ரன்), குறைந்த இலக்கை 'சேஸ்' செய்ய முடியாமல் 2வது மோசமான தோல்வியை பெற்றது. இதற்கு முன், 1996-97ல் பிரிட்ஜ்டவுனில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில், 120 ரன்னை விரட்டிய இந்தியா, 38 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அஜாஸ் '25'

இந்திய மண்ணில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக விக்கெட் சாய்த்த அன்னிய பவுலரானார் நியூசிலாந்தின் அஜாஸ் படேல். இவர், மும்பை வான்கடே மைதானத்தில் பங்கேற்ற 2 டெஸ்டில், 25 விக்கெட் கைப்பற்றினார். இதற்கு முன் இங்கிலாந்தின் இயான் போத்தம், மும்பை-வான்கடேயில் விளையாடிய 2 டெஸ்டில், 22 விக்கெட் (1980-81) சாய்த்திருந்தார்.

முதன்முறை

நியூசிலாந்து அணி முதன்முறையாக ஒரு டெஸ்ட் தொடரில், 3 போட்டியில் வெற்றியை பதிவு செய்தது. 31 முறை, தலா 2 டெஸ்டில் வெற்றி பெற்றிருந்தது.






      Dinamalar
      Follow us