/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெற்றியை நோக்கி மும்பை: ரஞ்சி கோப்பை பைனலில் ஆதிக்கம்
/
வெற்றியை நோக்கி மும்பை: ரஞ்சி கோப்பை பைனலில் ஆதிக்கம்
வெற்றியை நோக்கி மும்பை: ரஞ்சி கோப்பை பைனலில் ஆதிக்கம்
வெற்றியை நோக்கி மும்பை: ரஞ்சி கோப்பை பைனலில் ஆதிக்கம்
ADDED : மார் 13, 2024 06:58 PM

மும்பை: விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில் மும்பையின் வெற்றி வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கும் பைனலில் விதர்பா, மும்பை அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் மும்பை 224, விதர்பா 105 ரன் எடுத்தன. மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன் குவித்தது. பின் 538 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய விதர்பா அணி 3ம் நாள் முடிவில் 10/0 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் விதர்பா அணிக்கு அதர்வா (32), துருவ் ஷோரே (28), அமன் (32) சோபிக்கவில்லை. யாஷ் ரத்தோடு (7) ஏமாற்றினார். விதர்பா அணி 133 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது. பின் இணைந்த கருண் நாயர், கேப்டன் அக்சய் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. பொறுப்பாக ஆடிய கருண் நாயர் அரைசதம் கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்த போது முஷீர் கான் பந்தில் கருண் நாயர் (74) அவுட்டானார். மறுமுனையில் நிதானமாக ஆடிய அக்சய் அரைசதம் கடந்தார்.
ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 2வது இன்னிங்சில் 248/5 ரன் எடுத்திருந்தது. அக்சய் (56), ஹர்ஷ் துபே (11) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் தனுஷ், முஷீர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
யாருக்கு வாய்ப்பு
இன்றைய கடைசி நாளில் கைவசம் 5 விக்கெட் வைத்துள்ள விதர்பா அணி, வெற்றிக்கு 290 ரன் எடுக்க வேண்டும். ஒருவேளை போட்டி 'டிரா' ஆனால், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மும்பை அணி 42வது முறையாக ரஞ்சி கோப்பை வெல்லும்.

